மர்மமா இருக்கு என்னனு தெரியல?- பிரபஞ்சத்தின் விசித்திரமான ஒன்றை கண்டுபிடித்த நாசா!

|

பிரபஞ்சம் எவ்வளவு விரைவாக விரிவடைகிறது என்பதை கண்டறியும் பணியில் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி செயல்பட்டு வருகிறது. அதன்படி நமது பிரபஞ்சத்தில் விசித்திரமான ஒன்றை நாசா தொலைநோக்கி காட்சிப்படுத்தி இருக்கிறது. இது வித்தியாசமானது எனவும் வேறுபட்ட விரிவாக்க மதிப்பு எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்

நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் நமது பிரபஞ்சத்தில் விசித்திரமான ஒன்று நடப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அறிவிப்பானது மிகவும் தொழில்நுட்பமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. தொலைநோக்கியில் இருந்து தரவை பெற்ற நாசா இது வித்தியாசமான ஒன்று என குறிப்பிட்டுள்ளது. மேலும் விண்வெளி ஏஜென்சியான நாசா தனது செய்திக் குறிப்பில் இதில் "மர்மம்" இருப்பதாக தெரிவித்துள்ளது.

வேறுபாட்டிற்கான சரியான காரணம்

வேறுபாட்டிற்கான சரியான காரணம்

இது கிட்டத்தட்ட 30 ஆண்டு கால தொடர்புடைய கண்டுபிடிப்புகள் ஆகும். இந்த தொலைநோக்கியானது பிரஞ்சத்தின் விரிவாக்க வீதத்தை அளவிட உதவுகிறது. தரவு மிகவும் துல்லியமானதாக இந்த தொலைநோக்கியில் வெளிப்படுத்தப்படும். இது வித்தியாசமானது எனவும் வேறுபட்ட விரிவாக்க மதிப்பு எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்த வேறுபாட்டிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் நாசா

நாசா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி நாசா நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் கடந்த டிசம்பர் மாதம் ஏவப்பட்டது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நமது அண்டை விண்மீன் மண்டலத்தின் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பகிர்ந்திருக்கிறது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் தகவல்படி, ஹப்பிளை பின்தொடர்ந்து வரும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது அண்டை விண்மீன் மண்டலத்தின் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களை நாசா டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. இதன் GIF என்ற படம் மங்கலான படத்தை கூர்மைப்படுத்தி, மின்னும் நட்சத்திங்களை போன்று கிரகங்களை காட்டுகிறது.

அகச்சிவப்பு ஆய்வகமான ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி

நாசாவின் முந்தைய அகச்சிவப்பு ஆய்வகமான ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடும் போது, இந்த தொலைநோக்கியில் பதிவு செய்த காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. காரணம் இந்த வெப் தொலைநோக்கியில் பெரிய ரக முதன்மை கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அகச்சிவப்பு வானத்தை இன்னும் தெளிவாக பார்க்க மேம்பட்ட டிடெக்டர்கள் இதில் இருக்கிறது.

மிட் இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட்

மிட் இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட்

தொலைநோக்கியின் MIRI மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. MIRI என்பது மிட் இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகும். இதில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் மூலக்கூறுகளானது விண்மீன் வாயுக்கள் குறித்து ஆய்வாளர்களை நன்கு அறிந்துக் கொள்ள உதவுகிறது. நாசாவின் இந்த பதிவுக்கு 8300-க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்திருக்கிறது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது ஹப்பிளின் வாரிசாக அழைக்கப்படுகிறது. தற்போது சோதனையில் உள்ள இந்த தொலைநோக்கியானது ஜூன் 2022-ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை விண்மீன் மண்டலத்தின் அதிர்ச்சி

அண்டை விண்மீன் மண்டலத்தின் அதிர்ச்சி

நாசாவின் புதிய தொலைநோக்கி அண்டை விண்மீன் மண்டலத்தின் அதிர்ச்சியூட்டும் படங்களை பதிவு செய்து பகிர்ந்திருக்கிறது. இந்த புதிய தொலைநோக்கியின் முதன்மை ரக பெரிலியம் கண்ணாடியானது 18 ஹெக்ஸாகோனல் கோல்ட் பிளேடட் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசாக இது இருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கிாயனது 25 சதுர மீடட்ர் பரப்பளவை கொண்டிருக்கிறது. இந்த தொலைநோக்கி ஹப்பிளை விட 6 மடங்கு பெரியதாகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Mystery of Universe: Nasa Identified "Something Weird" Happening to our Universe

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X