இறந்தநிலையில் கரையொதுங்கிய 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்! ஐஸ்லாந்து மர்மம்..

|

மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஒரு தொலைதூர ஆள்நடமாட்டமில்லாத கடற்கரையில் 50 க்கும் மேற்பட்ட இறந்த பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

ஹெலிகாப்டரில் சுற்றுலாவிற்காக சுற்றுப்பயணம் சென்ற சுற்றுலாப் பயணிகள் கடந்த வியாழக்கிழமை அன்று லுங்குஃப்ஜூரூரில் திமிங்கலங்களின் சடலங்களைக் கண்டனர்.

 50 நீண்ட திருக்கை போன்ற பைலட் திமிங்கலங்கள்

50 நீண்ட திருக்கை போன்ற பைலட் திமிங்கலங்கள்

ரெய்ஜாவிக் ஹெலிகாப்டர்களின் பைலட்லான டேவிட் ஸ்வார்ஜான்ஸ் இதுதொடர்பாக கூறுகையில், அவரும் அவரது பயணிகளும் ஸ்னேஃபெல்ஸ்னெஸ் தீபகற்பத்தில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய 50 நீண்ட திருக்கை போன்ற பைலட் திமிங்கலங்களை எண்ணியதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக வீட்டில் இருப்பவர்களின் மொபைல்போன் விபரங்கள் சேகரிப்பு.!மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக வீட்டில் இருப்பவர்களின் மொபைல்போன் விபரங்கள் சேகரிப்பு.!

புதைந்திருக்க வாய்ப்புள்ளது

புதைந்திருக்க வாய்ப்புள்ளது

'அங்கு இன்னும் அதிகமான திமிங்கலங்களின் சடலங்கள் இருந்திருக்கலாம்.அவற்றில் சில ஏற்கனவே மணலில் புதைந்திருக்க வாய்ப்புள்ளது ' என்கிறார் டேவிட்.

'மிகவும் சோகமான காட்சி'

'மிகவும் சோகமான காட்சி'

இறந்த திமிங்கலங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்துள்ளதாகவும், அது 'மிகவும் சோகமான காட்சி' என்றும் விவரித்தார். அந்த திமிங்கலங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கரைக்கு நீந்திவந்திருக்கலாம் எனவும், நீரிழப்பு காரணமாக இறந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

 உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர்

உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர்

முற்றிலும் புரியாத காரணங்களுக்காக பைலட் திமிங்கலங்கள் அதிக எண்ணிக்கையில் கரையொதுங்குவதற்காக பெயர்பெற்றவை.


கடந்த ஆண்டு இந்த தீபகற்பத்தின் எதிர் பக்கத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து, மிகப்பெரிய திமிங்கலங்களின் கூட்டம் விலகிச் செல்வதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். தற்போது அதற்கு அருகிலேயே 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை கிளிப்பியுள்ளதுடன், விஞ்ஞானிகள் இந்த மர்மத்திற்கு விடை காண முடியாமல் விளக்கமளிக்க இயலாமல் திணறி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Mystery-dozens-dead-whales-beached-Iceland : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X