Home
News

கூகுள் மேப்பில் தென்பட்ட ஏரியா 51 பகுதியின் கறுப்பு கோபுரம்.. என்னவா இருக்கும்?

உலகின் மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாக அறியப்படும் ஏரியா 51-ல் அப்படி என்ன தான் இருக்கின்றது, அங்கு என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகளுக்கு இன்று வரை அதிகாரப்பூர்வமான பதில் இல்லை. குறிப்பாக பல ஆண்டுகளாக மர்மம் நீடித்துவரும் ஒரு பகுதியாக உள்ளது ஏரியா 51 (Area 51). இது தெற்கு நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 120 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க ராணுவ தளம் என்று கூறப்படுகிறது.

ஏரியா 51

கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு நீளும் இந்த நெடுஞ்சாலை பாதையில் எந்தவொரு கடைகளோ, பெட்ரோல் பங்க் அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கோ எந்த ஒரு இடமும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் சங்கிலிகளால் சுற்று வளைத்து மூடப்பட்டிருக்கும் இந்த இடத்திற்குள் யாருமே உள்ளே நுயை முடியாது.

கூகுள் மேப்பில் தென்பட்ட ஏரியா 51 பகுதியின் கறுப்பு கோபுரம்..

அதேபோல் இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமல்லாது வான்வெளி பரப்பிலும் அனுமதி கிடையாது. அதாவது விமானம் கூட இந்த பகுதிக்கு மேல் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஒரு பறவையின் நிழல் தெரிந்தால் கூட இங்கு இருக்கும் கேமராக்களில் அலர்ட் செய்யப்படுகிறது.

குறிப்பாக ஏரியா 51 லிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு முன்பே பொதுமக்கள் நடமாட்டம் நிறுத்தப்படும். அதை தாண்டி யாருமே வர முடியாது. அப்படி அந்த பகுதியில் என்னதான் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத புதிராக உள்ளது. அதேசமயம் அத்துமீறி இந்த பகுதிக்குள் நுழைபவர்கள் உடனே கேள்வி இன்றி கைது செய்யப்படுகிறார்கள்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, கடந்த 1955-ம் ஆண்டு உளவு விமான ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த ஏரியா 51 தற்போது பல அதிநவீன விமானங்களையும், போர் ஆயுதங்களையும் உருவாக்க அமெரிக்க ராணுவம் இந்த இடத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனாலும் அங்கு என்ன தான் நடக்கிறது என்பது அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே தெரியும்.

இந்நிலையில் தான் ஏரியா 51-இல் ஒரு விசித்திர காட்சி தென்பட்டுள்ளது. அதாவது ஏரியா 51-ல் ஒரு கறுப்பு முக்கோண கோபுரம் இருப்பது போல் கூகுள் மேப்பில் (google maps) தெரிந்துள்ளது. தற்போது இது தொடர்பான படங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிக வரைலாகி வருகிறது. அதுவும் இந்த கோபுரம் என்னவாக இருக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அதாவது அந்த கோபுரம் போன்ற அமைப்பு ஒரு விமானத்தை காட்சிப்படுத்துகிறதா அல்லது போலியானதா? என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

கூகுள் மேப்ஸ் புதிய அம்சம்

மேலும் சமீபத்தில் டைம் டிராவல் அம்சத்தை அறிமுகம் செய்தது கூகுள் மேப். இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம். அதாவது கூகுள் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் ஆனது 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு இடத்தை முன்பு எப்படி இருந்தது என்று டைம் டிராவல் செய்து பார்க்க அனுமதிக்கிறது. குறிப்பாக இதன் மூலம் பயனர்கள் பல்வேறு இடங்களில் வரலாற்று காட்சிகளைக் காண முடியும்.

கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றிற்கு இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 30 வருடங்களுக்கு முன்பு அந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதை எளிமையாக ஆராய முடியும். அதுவும் இந்த டைம் டிராவல் அம்சம் ஆனது பயனர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

ஒரு கட்டடம், தெரு அல்லது ஒரு நகரம் முதன் முதலில் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக லண்டன், பாரிஸ் போன்ற புகழ்பெற்ற நகரங்களைக் கூட நீங்க ஆராயலாம்.

கூகுள் மேப்ஸ் அல்லது கூகுள் எர்த் சென்று அதில் நீங்கள் ஆராய விரும்பும் இடத்தை தேர்ந்தெடுங்கள். அதன்பின்பு லேயர்கள் விருப்பத்திற்குச் ( layers option) சென்று டைம் லேப்ஸைத் ( time lapse) தேர்ந்தெடுக்கவும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடந்த காலத்தில் அந்த இடம் எப்படி இருந்தது என்பதை இவை காண்பிக்கும்.

Best Mobiles in India

English summary
Mysterious tower spotted at Area 51 on Google Maps: heres all we know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X