என்னப்பா இதுல ஒரு சந்தோஷமா?-டொனால்ட் டிரம்ப், அமிதாப் பச்சன் பெயரில் இ-பாஸ்: மாநிலத்துக்குள் நுழைய போலி இ-பாஸ்

|

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேபோல் பல்வேரு மாநிலங்களும் தங்களது மாநிலங்களுக்குள் நுழைவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் இமாச்சல பிரதேசம் தங்கள் மாநிலத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மாநிலத்துக்குள் நுழைபவர்களுக்கு இ-பாஸ்

மாநிலத்துக்குள் நுழைபவர்களுக்கு இ-பாஸ்

அதேபோல் இமாச்சலப் பிரதேசத்திலும் பிற மாநிலத்தில் இருந்து தங்களது மாநிலத்துக்குள் நுழைபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகடிவ் என வந்திருந்தால் மட்டுமே இ-பாஸ் அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் மாநிலத்துக்குள் வருபவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

முறையான காரணங்கள் மற்றும் பல்வேறு வழிமுறைகள்

முறையான காரணங்கள் மற்றும் பல்வேறு வழிமுறைகள்

முறையான காரணங்கள் மற்றும் பல்வேறு வழிமுறைகள் உடன் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயர்களில் இ-பாஸ்கள் பெறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இமாச்சலப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அளித்த புகாரின் பெயரில் சிம்லா கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் பெயர்களில் இ-பாஸ்கள்

முக்கிய பிரமுகர்கள் பெயர்களில் இ-பாஸ்கள் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிம்லா போலீஸார்கள் தரப்பில் தெரிவிக்கும் போது, மே 7 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெயரிலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெயரிலும் இ-பாஸ் பெற்றப்பட்டுள்ளது,. இந்த இ-பாஸ்கள் ஒரே நம்பரில் பெறப்பட்டிருக்கிறது. மேலும் இது ஒரே ஆதார் கார்ட் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன எனவும் சம்பந்தப்பட்ட நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்

டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயர்களில் ஹெச்பி -2563825 மற்றும் ஹெச்பி -2563287 ஆகிய இரண்டு இ-பாஸ்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருவரும் ஒரே மொபைல் எண் மற்றும் ஆதார் அட்டைகள் பதிவிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் பயணர்களின் விவரங்களை பிறர் அறிந்துக் கொள்ள பகிர்வு

தனிமைப்படுத்தல் மற்றும் பயணர்களின் விவரங்களை பிறர் அறிந்துக் கொள்ள பகிர்வு

ஏப்ரல் 26 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் அரசு உத்தரவுப்படி மாநிலத்துக்குள் நுழைய விரும்பும் அனைவரும் https://covid19epass.hp.gov.in/applications/epass/apply என்ற வலைதளத்தில் இ-பாஸ் அப்ளை செய்ய வேண்டும். அவர்கள் வருகை இருப்பிடம் குறித்த விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஆகிய தடமறிதலை பிறர் அறிந்து கொள்வதற்காக இந்த தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.தனிமைப்படுத்தல் மற்றும் பயணர்களின் விவரங்களை பிறர் அறிந்துக் கொள்ள பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள்

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள்

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்., https://tnepass.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசு அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுக வேண்டும். மொபைல் எண்ணை உள்ளிட்ட அதில் கிடைக்கும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். நீங்கள் பயணிக்கும் வாகனத் தேர்வை கிளிக் செய்த பிறகு, தங்களது பெயர், முகவரி (வீடு மற்றும் செல்லும்இடம்), பயண வரம்பு ( மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே) என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் பயணத்தின் நேரம், எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் பயணர்கள் விவரம், வாகன விவரம், அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் உள்ளிட வேண்டும்.

ஆவணங்கள் மற்றும் காரணங்கள்

ஆவணங்கள் மற்றும் காரணங்கள்

பயணம் மேற்கொள்ளும்போது ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது மருத்துவ அவசர நிலை என்றால் மருத்த சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம், திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். இ-பாஸ் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்கலாம். விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டதும், தங்கள் ஆவணங்கள் மற்றும் சமர்பிப்பு விவரங்கள் சரிபார்க்கப்படும், அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதும் இ-பாஸ் வழங்கப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mysterious person Took Fake Epass to Enter HP as the name of Donald Trump and Actor Amitabh Bachchan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X