ஆப் டவுன்லோட் செய்ய சொல்லி ரூ.9 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்கள்.!

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் ஒரு சில தொழில்நுட்பங்கள் நமக்கு சிக்கல்களை கொண்டுவருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது.

 பணபரிவர்த்தனைகள் ஆன்லைன்

அதன்படி பணபரிவர்த்தனைகள் ஆன்லைன் உலகுக்குள் வந்தபின்னர் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நேரம் மிச்சம் ஆகியுள்ளது, வீண் அலைச்சல் இல்லை. அதேவேளையில் ஆன்லைன் ஏமாற்றுக்காரர்களின் கைகளிலும் சிக்கியுள்ளது.

மிகக்கவனமா இருந்தால்

எனவே பயனாளர்கள் மிகக்கவனமா இருந்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து நம் பணத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. நாக்பூரில் ஒரே போன்கால் மூலம் ரூ.9 லட்சத்தை இழந்துள்ளார் ஒருவர். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் என்பவரின் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிளிப்கார்ட் தளத்தில் இந்த 5 மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாதா ஆபர்கள்.!பிளிப்கார்ட் தளத்தில் இந்த 5 மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாதா ஆபர்கள்.!

சோக்கின் செல்போனை அவரது 15

அப்போது அசோக்கின் செல்போனை அவரது 15 வயது மகன் பயன்படுத்தியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் அப்பாவின் செல்போனில் நான் சொல்லுட் செயலியை பதிவிறக்கம்செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

 என்னவென்றால் வேறொரு

அவர் கூறிய செயலி என்னவென்றால் வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி ஆகும். செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தவுடனனேயே செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர் அந்த மர்மகும்பல்.

பின்பு ஆன்லைன் மோசடி

மேலும் இது குறித்து அசோக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு ஆன்லைன் மோசடி தொடர்பாக புகாரை பதிவு செய்துள்ள போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இணையதளத்தில் நீங்கள் பார்ப்பது

அதேபோல் இணையதளத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் சரியான தகவல் அல்ல, அதிலும் குறிப்பாக வங்கி தொடர்பான செல்போன் எண்கள், வங்கி தொடர்பான சேவை மைய எண்கள் ஆகியவை பெரும்பாலும் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டவையே. போலி எண்களுக்கு அழைப்பு விடுத்து, இந்த வலையில் வீணாய் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை இழக்கிறார்கள். வங்கியின் அங்கீகரிக்கப் பட்ட ஆப்ஸ் மூலம் மட்டும் உங்கள் வங்கி சேவையைப் பயன்படுத்துங்கள், இல்லை என்றால் சிக்கல் தான்.

Best Mobiles in India

English summary
Mysterious Person told the Boy to Install the App on your Fathers Phone: Rs 9 Lakhs Cheated: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X