என்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!

|

மதுரை மேலூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஸ்டோரில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் மொபைல் போனை திருடி லுங்கிக்குள் மறைத்து வைத்து சென்ற மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சராசரி நிகழ்வாக மாறும் செல்போன் திருட்டு

சராசரி நிகழ்வாக மாறும் செல்போன் திருட்டு

செல்போன் திருட்டு என்பது சராசரி நிகழ்வாக மாறும்வகையில் திருட்டுச் சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே தொடர் நிகழ்வுகளாகி வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது.

செல்போன் திருட்டு என்பது மோஷமான செயல்

செல்போன் திருட்டு என்பது மோஷமான செயல்

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவலும் புகைப்படம் என அனைத்தும் உட்பட வங்கி கணக்கு முதல் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது.

மொபைல் திருட்டு சம்பவம்

மொபைல் திருட்டு சம்பவம்

இந்தநிலையில் மதுரை மாவட்டம் மேலூர் பெரியகடைவீதி பகுதியில் உள்ள கடையில் மொபைல் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பெரியகடை வீதி பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஸ்டோர் நடத்தி வருபவர் பாலவாசுதேவன். இவர் மேலூர் அனைத்து வர்த்தக முன்னேற்ற பொது நலச் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆப்பிள் ஐபோன், டிரோன், 1 கிலோ தங்கம் கடத்தல்! தங்கத்தை எங்கே வைத்து கடத்தினர் தெரியுமா?ஆப்பிள் ஐபோன், டிரோன், 1 கிலோ தங்கம் கடத்தல்! தங்கத்தை எங்கே வைத்து கடத்தினர் தெரியுமா?

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு

இந்த நிலையில் இவரது சூப்பர் மார்க்கெட் ஸ்டோருக்கு நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவது போல் வாடிக்கையாளர் ஒருவர் லுங்கி அணிந்தபடி வந்துள்ளார். இவர் பொருட்கள் வாங்குவது போல் பாவணை செய்து யாரும் பார்க்காத நேரத்தில் கடையில் இருந்த கல்லாப்பெட்டியில் மேல் இருந்த மொபைல் போனை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்து லுங்கிக்குள் போட்டு மடித்துக் கட்டிவிட்டார். மொபைல் போனை எடுத்த அடுத்த விநாடியே அவர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு

சிறிது நேரத்திற்கு பிறகு கடையின் கல்லாப்பெட்டி மேல் இருந்த மொபைல் போன் காணாமல் போனது குறித்து கவனிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் மொபைல் போனை திருடியது தெரியவந்துள்ளது.

ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார்

ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார்

இந்த வீடியோ காட்சிகள் ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான காட்சிகளை வைத்து மொபைல் போன் திருடிய மர்மநபரை குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களிலும் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Mysterious Man Mobile Phone Theft at Melur Supermarket store: Complaint Filed!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X