சபாஷ் உங்களுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்திருக்கு:இதை மட்டும் செய்தால் போதும்-பெண்ணுக்கு நேர்ந்த கதி!

|

பெங்களூருவில் உள்ள ஒரு பெண்ணிடம் ரூ.1 கோடி பரிசு விழிந்திருப்பதாக கூறி மோசடி செய்த மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்கதையாகும் பணமோசடி

தொடர்கதையாகும் பணமோசடி

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி

ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி

குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

பரிசுத் தொகைக்கு முன்பணம்

பரிசுத் தொகைக்கு முன்பணம்

அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செயல்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். இதே பாணியில் நூதன முறையை கையாண்டு மோசி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ரூ.1 கோடி பரிசு

ரூ.1 கோடி பரிசு

பெங்களூரு வித்யாரண்யபுராவில் வசித்து வருபவர் சுபத்ராபாய். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து பேசிவதாகவும் தாங்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரூ.1 கோடி பரிசு விழுந்திருப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

அதீத மர்மங்கள் நிறைந்த "லோனார் ஏரி"- சர்வதேச ராம்சர் பட்டியலில் இணைப்பு: அடுத்தது என்ன?

அரசுக்கு வரி செலுத்த வேண்டும்

அரசுக்கு வரி செலுத்த வேண்டும்

இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். ரூ.1 கோடி பெற வேண்டும் என்றால் முன்னதாகவே அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார்.

ரூ.9.25 லட்சம் வரி

ரூ.9.25 லட்சம் வரி

ரூ.1 கோடிக்கு ரூ.9.25 லட்சம் வரி செலுத்த வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். வரித் தொகையை செலுத்தினால்தான் பரிசுத் தொகை கிடைக்கும் என அந்த பெண் கூறி வங்கிக் கணக்கு ஒன்றையும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.9.25 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப்

தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப்

வரித் தொகை செலுத்தியவுடன் அந்த மர்மநபரின் எண்ணுக்கு கால் செய்துள்ளார். ஆனால் அந்த மர்மநபர் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்த நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாமல் போகியுள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை சுபத்ராபாய் உணர்ந்துள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

சுபத்ராபாய் தான் ஏமாற்றப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mysterious Person Cheated Rs.9 lakh from a woman

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X