சார் பாதி விலையில் ஐபோன்., எல்லாம் துபாய் இறக்குமதி: நம்பி மொத்தம் ரூ.19 லட்சம் கொடுத்த டாக்டர்- ஒரு டுவிஸ்ட்!

|

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்கள்

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்கள்

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றம்

ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றம்

குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் குவிக்கர் தளம் மூலமாக பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஏமாற்றப்பட்டார்.

பிரபலமான ஒன்றாக குயிக்கர் தளம்

பிரபலமான ஒன்றாக குயிக்கர் தளம்

ஆன்லைன் விற்பனை தளங்களில் பிரபலமான ஒன்றாக இருப்பது குயிக்கர் தளம். பயன்படுத்திய பொருள் விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் இது புகழ்பெற்ற தளமாகும். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இந்த தளத்தில் கணக்கை ஒன்றை ஓபன் செய்துள்ளார்.

குரங்கின் மண்டைஓட்டுக்குள் சிப்., வீடியோகேம் விளையாடும் குரங்கு- அடுத்து மனிதர்கள்தான்!குரங்கின் மண்டைஓட்டுக்குள் சிப்., வீடியோகேம் விளையாடும் குரங்கு- அடுத்து மனிதர்கள்தான்!

 ரூ.80,000 ஐபோன் ரூ.45,000 மட்டுமே

ரூ.80,000 ஐபோன் ரூ.45,000 மட்டுமே

இந்த கணக்கின் மூலம் மருத்துவருக்கு பழக்கமான நபர் ஒருவர் இந்தியாவில் கிடைக்கும் ஐபோன்களை பாதி விலையில் வழங்குவதாக கூறியுள்ளார். அதாவது இந்தியாவில் ரூ.80,000-த்துக்கு கிடைக்கும் ஐபோனை துபாயில் இரு்நது ரூ.45000 வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெங்களூரு மருத்துவர், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு முழுப்பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பின் ஐபோன் கிடைக்க தாமதமானதால் மருத்துவர் தொடர்ந்து அவருக்கு அழைப்புவிடுத்து வாக்குவாதம் செய்துள்ளார்.

பாதி விலையில் ஐபோன்

பாதி விலையில் ஐபோன்

ஐபோன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறிய நபர், சாதனங்கள் துபாயில் இருந்து கொண்டு வருவதால் அதற்காக விற்பனை வரி மற்றும் பிற வரிகளை கட்டுவதற்கு பணம் தேவைப்படுவதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அதோடு ஐந்து ஐபேட்கள், ஐந்து வாட்ச்கள், லேப்டாப்கள் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என அந்தநபர் மருத்துவரிடம் கூறியுள்ளார்.

கைவந்து சேராத பொருட்கள்

கைவந்து சேராத பொருட்கள்

இதேபோல் பல்வேறு காரணங்களை அந்த நபர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். பணத்தை கொஞ்சமாக கொஞ்சமாக மொத்தம் சுமார் ரூ.19 லட்சம் வரை மருத்துவர் அந்த மர்ம நபருக்கு செலுத்தியுள்ளார். ஆனால் ஒரு பொருள்கூட கைவந்து சேர்ந்தபாடில்லை.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இதையடுத்து சுமார் 19 லட்சம் ரூபாய்வரை இழந்தபிறகு மருத்துவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mysterious person cheated a Bangalore doctor by claiming bought an iPhone at half price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X