Home
News

ஒரு என்டே இல்லையா?- யாரு சாமி இவுங்க- மீண்டும் தோன்றிய மோனோலித்: இந்த முறை எங்கே தெரியுமா?

மர்மமான மோனோலித் உலோகப் பொருள் தற்போது மீண்டும் துருக்கி நாட்டில் தோன்றியுள்ளது. இதில் நிலவை காண வேண்டுமானால் வானத்தை பாருங்கள் என்ற வசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

மர்ம உலோகத்தூண்

மூன்று பக்கங்களை கொண்ட மர்ம உலோகத்தூண் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தோன்றியது. அடுத்தடுத்து பல நாடுகளில் இதேபோன்று மோனோலித் எனப்படும் மர்மத்தூண் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏலியன்ஸ்களின் வேலையாக இருக்கலாம் என தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு இடங்களில் தோன்றிய மோனோலித்

பல்வேறு இடங்களில் தோன்றிய மோனோலித்

போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு மர்மமான உலோக மோனோலிக் தோன்றியது. இந்த மோனோலித் உருவங்கள் மர்மமான முறையில் பூமியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றிய பின்னர் இன்னும் 4 இடங்களில் தொடர்ந்து தோன்றியது.

இந்தியாவில் தோன்றிய மோனோலித்

இந்தியாவில் தோன்றிய மோனோலித்

இதையடுத்து இதேபோன்ற உலோக பொருள் ஒன்று இந்தியாவிலும் தோன்றியது. ஆனால் இந்தியாவில் எந்த மர்மமும் இல்லை. காரணம் பூங்கா நிறுவனம் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர இந்த மோனோலித் வடிவ உருவ பொருளை வைத்ததாக அறிவித்தது.

மோனோலித் உருவ அமைப்பு

சுமார் பல மீட்டர் உயரத்திலும், மந்தமான வெள்ளி நிற மேற்பரப்பைக் கொண்டுள்ளது, ஸ்குரூ (screw) மூலம் ஒன்றாகப் பிடிக்கப்பட்டு இருந்துள்ளது. ஏலியன்ஸ் இதை வைத்திருக்கலாம் என கணிக்கப்பட்டாலும் பல்வேறு நாடுகளில் மர்மமான முறையில் தோன்றிய மோனோலித்துக்கு விடை கிடைத்துள்ளது.

பழமை வாய்ந்த கோவிலில் இருக்கும் மோனோலித்

பழமை வாய்ந்த கோவிலில் இருக்கும் மோனோலித்

தற்போது மீண்டும் துருக்கி நாட்டில் தென்கிழக்கு மாகாணமாகன சான்லியுர்ஃபா என்ற இடத்தில் மர்மமான உலோக பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலோக பொருள் துருக்கி நாட்டின் பழமை வாய்ந்த கோவிலான கோபெக்லிடெபெவில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோனோலித்தில் இருக்கும் வசனம்

இதுமிகவும் பழமை வாய்ந்ததாக கோவிலாகும் எனவும் இந்த உலோகபொருள் சுமார் 3 மீட்டர் உயர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த மோனோலித்தில் இருக்கும் சொற்றொடர் அனைவரையும் வியப்படைய செய்யும் வகையில் இருக்கிறது.

மோனோலித்தில் இருக்கும் வசனம்

மோனோலித்தில் இருக்கும் வசனம்

இத்தனை நாட்களாக பல்வேறு நாடுகளில் தோன்றிய பிற உலோகப் பொருள் போலல்லாமல் இதில் சிறு மாற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது இதில் நிலவை காண வேண்டுமானால் வானத்தை பாருங்கள் என்ற வசனம் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Mysterious Monolith Pillar Found in Turkey: Small Difference in this Monolith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X