மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!

|

குஜராத்தின் சுரேந்திரநகர், கெடா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை சேர்ந்த கிராமவாசிகள் மர்மமான உலோக பந்துகள் வானில் இருந்து விழுவதாக தெரிவத்துள்ளனர். கருப்பு மற்றும் வெள்ளி உலோக பந்துகள் குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்தன.

ஒன்றுக்கு மேற்பட்ட உலோக பந்துகள்

ஒன்றுக்கு மேற்பட்ட உலோக பந்துகள்

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சைலா கிராமத்தில் வசிப்பவர்கள் சமீபத்தில் வானத்தில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உலோக பந்துகள் விழுந்ததாக தெரிவித்துள்ளனர். வானத்தில் இருந்த மர்ம பொருட்களின் துண்டுகள் வயல்களில் சிதறிக் கிடந்தது. இந்த நிகழ்வால் அப்பகுதி மக்கள் பீதியடைந்திருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக கெடா மாவட்டத்தின் உம்ரேத் மற்றும் நாடியாட், ஆனந்த் மாவட்டத்தின் உள்ள மூன்று கிராமங்களில் விசித்திரமான கருப்பு மற்றும் வெள்ளி உலோகப் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆய்வு

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆய்வு

இந்த சம்பவம் அரங்கேறியதையடுத்து இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (பிஆர்எல்) களமிறங்கி இருக்கிறது. இது விண்வெளி துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமாகும், இந்த நிறுவனம் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நடத்துகிறது. இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் இந்த விசித்திரமான உலோகப் பந்துகள் செயற்கைக்கோளில் இருந்து குப்பைகள் என கூறப்படுகிறது.

உலோக வளையம் மற்றும் சிலிண்டர் போன்ற பொருட்கள்

உலோக வளையம் மற்றும் சிலிண்டர் போன்ற பொருட்கள்

கடந்த மாதம், மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தேவாஹி தாலுகாவில் உள்ள ஒரு உலோக வளையம் மற்றும் சிலிண்டர் போன்ற பொருட்கள் வானத்தில் இருந்து விழுந்தன. இதுகுறித்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமவாசிகள் அந்த பொருட்களை மீட்டு சூடாக இருப்பதாக தெரிவித்தனர். பின் இது விண்வெளி குப்பைகள் என கூறப்பட்டது. இதுகுறித்து நிபுணர்களின் தகவல்படி, இந்த பொருட்கள் பெரும்பாலும் செயற்கைக் கோள் ஏவுதலுக்கு பிறகு விழுந்த ராக்கெட் பூஸ்டர்களின் துண்களாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

மூன்று பகுதிகளில் மர்ம விண்வெளி குண்டுகள்

மூன்று பகுதிகளில் மர்ம விண்வெளி குண்டுகள்

குஜராத்தின் மூன்று பகுதிகளில் மர்ம விண்வெளி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. வியாழன் மாலை 4.45 மணியளவில் ஐந்து கிலோ எடையுள்ள முதல் பெரிய கருப்பு உலோக பந்து பலேஜில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து காம்போலாஜ் மற்றும் ராம்புராவிலும் வானத்தில் இருந்து பொருட்கள் விழுந்தது கண்டெடுக்கப்பட்டது. மே 12 மாலை ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பாலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா ஆகிய மூன்று இடங்களில் விண்வெளியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் விழுந்தன. இதையடுத்து கிராம மக்கள் ஆர்வத்துடன் இதை காண முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தடய அறிவியல் ஆய்வக நிபுணர்களை அழைத்து விசாரணையை தொடங்கியது.

பெரிய கருப்பு பந்து

பெரிய கருப்பு பந்து

மே 12 மாலை சுமார் 5 மணியளவில் பலேஜில் என்ற பகுதியில் ஐந்து கிலோ எடையுள்ள முதல் பெரிய கருப்பு பந்து விழுந்தது. இதைதொடர்ந்து காம்போலாஜ் மற்றும் ராம்புரா பகுதியில் இதேபோன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து பகுதி ஒவ்வொன்றுக்கும் 15 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறது. இதையடுத்து கிராம மக்கள் காவல்துறையை அழைத்து தகவலை குறிப்பிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

காவல்துறை காண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன்

காவல்துறை காண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன்

குஜராத் மாநிலம் ஆன்ந்த் மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திடம் கூறுகையில், இந்த உலோக பந்தானது செயற்கைக்கோள் குப்பைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்டார். முதல் பந்து மாலை 4.45 மணியளவில் விழுந்தது அடுத்த சிறிது நேரத்தில் மற்ற இரண்டு இடங்களில் உலோக பந்துகள் விழுந்தன., காம்போலாஜில் ஒரு வீட்டின் மீது இந்த பந்து விழுந்துள்ளது, பிற இரண்டு பகுதிகளிலும் திறந்த வெளி பகுதிகளில் விழுந்திருக்கிறது. இது என்ன வகையான விண்வெளி பந்துகள் என்பது தற்போது வரை தெரியவில்லை, ஆனால் கிராம வாசிகள் தகவலின்படி இது வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை துரிதப்படுத்தப்படும்

விசாரணை துரிதப்படுத்தப்படும்

விசாரணையை துரிதப்படுத்த எஃப்எஸ்எல் நிபுணர்கள் குழுவை மாவட்ட காவல்துறை வரவழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்எஸ்எல் விசாரணை நடத்தி கூடுதல் விவரங்களை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எஃப்எஸ்எல் அறிக்கை வரும் வரை காத்திருக்கப்படும் எனவும் அதிகாரிகளும் பொருட்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கண்டறிய முயற்சித்து வருவதாக ராஜ்ஜியன் குறிப்பிட்டார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mysterious Metal Ball Fall From Sky in Gujarat: Debris From a Satellite

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X