"அது என்ற இரத்தம்டா" மகனை பின்தொடர்ந்த மர்ம நபர்.. வீடியோ மூலம் Musk விடுத்த எச்சரிக்கை!

|

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய நாளில் இருந்து தினசரி ஏதாவது ஒரு தலைப்பில் செய்தியாக உலா வந்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் பகிர்ந்த ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மகனை பின்தொடர்ந்த மர்ம நபர்.. வீடியோ மூலம் Musk விடுத்த எச்சரிக்கை!

எலான் மஸ்க் இன் மகன் லில் எக்ஸ் சென்ற காரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து இருக்கிறார். இதுகுறித்த வீடியோவை தான் மஸ்க் ட்விட்டரில் நேரடியாக பகிர்ந்து இவர் யார் என்று தெரியுமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். முகமூடியுடன் பின்தொடர்ந்த நபர் யார், மஸ்க்கின் மகனை தொடரக் காரணம் என்ன என இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தான் அந்த காரில் இருந்ததாக நினைத்து அந்த நபர் என் மகன் சென்ற காரை பின் தொடர்ந்து இருப்பதாக மஸ்க் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த நபர் அல்லது காரை யாருக்கேனும் தெரியுமா எனவும் மஸ்க் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி காரில் அமர்ந்திருக்கிறார், வீடியோவில் அந்த நபர் முகமூடி அணிந்தபடியே மொபைலை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்குகிறார். தொடர்ந்த காரின் நம்பர் பிளேட் காட்டப்படுகிறது. அதில் CJ82G38 என கார் எண் பதிவிடப்பட்டிருக்கிறது.

வீடியோவுடன் மஸ்க் பதிவிட்ட கருத்துகள் குறித்து பார்க்கையில், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் லில் எக்ஸ் சென்ற காரை ஒருவர் பின்தொடர்ந்தான். அது நான் என நினைத்து. தொடர்ந்து காரை தடுத்து நிறுத்தினான். என் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்க உதவும் ஸ்வீனி மற்றும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். அது யார் ஸ்வீனி, அது என்ன அமைப்பு என்று கேள்வி வருகிறதா?.

எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் இருக்கும் இடங்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார் ஜாக் ஸ்வீனி. இவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலமாக தான் இந்த செயல்கள் எல்லாம் நடக்கிறது என மஸ்க் கருதி உள்ளார். இதையடுத்து ஜாக் ஸ்வீனி ட்விட்டர் பக்கம் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டது. மஸ்க் பதிவிட்ட இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டரில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

உலக பணக்காரர்களின் பட்டியலில் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளிய Elon Musk ஏறத்தாழ கடந்த ஓராண்டு காலமாக முதலிடத்தை தக்க வைத்தார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள்முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீப காலமாக எந்த பக்கம் திரும்பினாலும் மஸ்க் ட்விட்டர் என்பது தான் பேசு பொருளாக இருக்கிறது. SpaceX, Tesla, Boring Company, Neuralink உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளராக எலான் மஸ்க் இருக்கிறார்.

மகனை பின்தொடர்ந்த மர்ம நபர்.. வீடியோ மூலம் Musk விடுத்த எச்சரிக்கை!

ஒருவர் ஒரு நிறுவனத்தை வாங்கியதும் அதில் மாற்றங்களை செய்வது வழக்கம் தான். ஆனால் இங்கு இருப்பவர் எலான் மஸ்க் அல்லவா. உலக நாடுகளின் பல முக்கிய பிரபலங்கள் கணக்கு வைத்திருக்கும் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க், சிறிதும் யோசிக்காமல் அதில் அதிரடியாக மாற்றங்கள் செய்தார். தினசரி அதிரடியாக மாற்றங்கள் செய்து ஏதாவது ஒரு வகையில் பேசு பொருளாக உலா வந்துக் கொண்டிருக்கிறார்.

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் உச்சரிக்கும் வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆரம்பத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

எலான் மஸ்க் பல விமர்சனங்களை பெற்று வந்தாலும் தனது நோக்கத்தில் விடாப்படியாக இருந்து தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறார் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.

Best Mobiles in India

English summary
Mysterious man stalking Elon Musk's son: Elon Musk issues warning with Video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X