மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

|

கடற்கரையில் மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ உலோக பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பந்து குறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

41 கிலோ உலோக பந்து

41 கிலோ உலோக பந்து

கடற்கரையில் மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ உலோக பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோக பந்து தோற்றம் மற்றும் அது எப்படி கடற்கரைக்கு வந்தது என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும் இது செயற்கைகோள் அல்லது விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என விண்வெளி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வைரலாகும் புகைப்படம்

கடற்கரை நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உலோக பந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும் அதன் குறித்து முழுமையாக அறியப்படாத நிலையில் இந்த உலோக பந்து குறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

ரஷ்ய உரையுடன் இருந்த உலோக பந்து

ரஷ்ய உரையுடன் இருந்த உலோக பந்து

பிப்ரவரி 24 ஆம் தேதி பஹாமாவில் உள்ள ஹார்பர் தீவில் பிரிட்டிஷ் பெண் மனோன் கிளார்க் என்பவர் உலோக பந்து ஒன்று மணலில் இருந்து வெளியேறுவதை கண்டார். சுமார் 41 கிலோ எடையுள்ள இந்த உலோக பந்தின் மேற்பரப்பில் ரஷ்ய உரை ஒன்று இருந்துள்ளது.

புகைப்படம் எடுத்து குடும்பத்தாருடன் பகிர்வு

இந்த உலோக பொருள் மிகவும் கனமாக இருந்ததன் காரணமாக அந்த பொருளை அவரால் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து இந்த உலோக பொருளை புகைப்படம் எடுத்த அந்த பெண் தனது குடும்பத்தார் மற்றும் பிறரிடம் தெரிவித்தார்.

அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார்: அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார்: "இது டிரைலர்" என எச்சரிக்கை- என்ன நடந்தது?

இதுகுறித்து தனியார் பத்திரிக்கையிடம் அந்த பெண் கூறுகையில், அவரது குடும்பத்தினர்கள் அந்த பந்தை தேடத் தொடங்கினர். அப்போது வழக்கத்தை விட வேறு இடத்திற்கு தாங்கள் நடந்த சென்று தேடியதாகவும், அப்போது வெள்ளி போன்ற பளபளப்பான நிலவு போன்ற ஒரு பொருளை காண முடிந்ததாகவும் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது உலோக பந்து காண முடிந்ததாகவும் இதில் ரஷ்ய உரை இருந்ததாகவும் தெரிவித்தார்.

விண்கலத்தில் இருந்து விழுந்திருக்கலாம்

விண்கலத்தில் இருந்து விழுந்திருக்கலாம்

உலோக பந்தின் தோற்றம் மற்றும் அது எப்படி கடற்கரையில் புதைக்கப்பட்டது என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை எனவும் இது செயற்கைகோள் அல்லது விண்கலத்தில் இருந்து வந்திருக்கலாம் என விண்வெளி வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹைட்ராஜின் டேங்க் ஆக இருக்கலாம்

ஹைட்ராஜின் டேங்க் ஆக இருக்கலாம்

மேற்பரப்பில் உள்ள ரஷ்ய உரையானது, 43 லிட்டர் கொள்ளளவு கொண்டது எனவும் வெப்பநிலை வரம்பை -170 and C மற்றும் -196 ° C எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விண்வெளி வீரர் ஒருவர் கூறுகையில், இது ஒரு வகையான ராக்கெட்டில் இருந்த ஹைட்ராஜின் டேங்க் என்பது 99 சதவீதம் உறுதி என குறிப்பிட்டார்.

Image credits: Twitter/Sciency Thoughts.

Source: independent.co.uk

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mysterious 41KG Titanium Ball Discovered in Beach With Russian Text

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X