பிரபல ஷாப்பிங் தளத்தில் AI அம்சம்! இனி சூப்பர் ஸ்டார் மாதிரி கூட நீங்க ட்ரெஸ் பண்ணலாம்!
சாட்ஜிபிடி (ChatGPT) வந்த பிறகு பெரும்பாலான சேவைகளில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்பாட்டை உலகம் இப்போது பயன்படுத்த துவங்கிவிட்டது. பல துறைகளில் இப்போது AI-களின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இப்போது, ஆன்லைன் ஷாப்பிங் துறையிலும் இவை தலை ஓங்க துவங்கிவிட்டன.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ட்ரெண்டிங் ஆனா ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்கும் பெஸ்ட் ஷாப்பிங் தளமாக திகழும் மிந்த்ரா (Myntra) தளத்தில் தான் இப்போது புதிய AI சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய AI சேவையை நிறுவனம் மைபேஷன்ஜிபிடி (MyFashionGPT) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆடைகளை இது உங்களுக்காக தேர்வு செய்யும் திறனுடன் செயல்படுகிறது.

இந்த புதிய Myntra MyFashionGPT சேவையின் மூலம், இனி வாடிக்கையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம் பல மடங்கு மேம்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. உலக ட்ரெண்டிங் ட்ரெஸ்ஸிங் எது? உங்களுக்கு பிடித்த பிராண்ட்டில் புது வரவு எது? திருமணத்திற்கு என்ன தேர்வு செய்வது? விடுமுறைக்கு எந்த ஆடைகளை அணிந்தால் சூப்பராக இருக்கும்? என்று பல கேள்விகளை இந்த MyFashionGPT இடம் நீங்கள் கேட்கலாம்.
ட்ரெஸ்ஸிங் தொடர்பான ஆபரணங்கள், எந்த விதமான விழாவுக்கு எந்த மாதிரியான ஆடை அணிவது? எந்த வகை காலணி மற்றும் ஷூ, உங்கள் தேர்வுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அனைத்தையும் இந்த AI சேவை உங்களுக்கு தொகுத்து வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. உண்மையை சொல்ல போனால், ஒவ்வொரு தனி நபர் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த MyFashionGPT அம்சம் ஒரு பேஷன் டிசைனர் போல உங்களுக்கு தேவையானதை தொகுத்து வழங்குகிறது.
இனி மிந்த்ரா வாடிக்கையாளர்கள், AI இன் உதவியுடன் அவர்களுக்கு பிடித்தமான உடைகளை, ட்ரெண்ட் உடன் தேர்வு செய்து அணிய முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல ஆடைகளை இது பயனர்களுக்கு வழங்குகிறது. பயனர்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் நிறங்களில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் ஆடைகளை ஒட்டுமொத்த தயாரிப்புகளில் இருந்து செலக்ட் செய்து வழங்குகிறது.

உதாரணமாக, MyFashionGPT ஆனது பிரபலமான நிகழ்வுகள் தொடர்பான ஆடை வினவல்களைப் பற்றிய தடையற்ற விசாரணையை வழங்கும் திறன் கொண்டது. ஐ.பி.எல் போட்டிக்கு தொடர்பான ஆடைகளை காண்பி, கடற்கரைகள் போன்ற அழகிய பயண இடங்களுக்கு ஏற்ற ஆடைகளை பரிந்துரை செய்க, பிரபலமான திரைப்படங்களில் இருந்து பிரபலமான பிரபலங்கள் அணிந்த ஆடைகளை காண்பி, இந்திய திருமணங்கள், மங்கள நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு எதை அணிவது?
தென்னிந்திய திருமணத்திற்கான மணமகனின் ஆடைகளை எனக்குக் காட்டு, நான் மே மாதம் கோவா செல்ல விரும்புகிறேன் எதை அணிவது? நான் இந்த மாதம் அல்லது இந்த சீசனில் என்ன அணிய வேண்டும்? எனக்கு ப்ளூ பிடிக்கும், பெஸ்ட் கலெக்ஷனை காண்பி, மலையேற்றத்திற்கு என்ன அணிய வேண்டும் என்று சொல்லுங்கள்? நான் கோடை விடுமுறைக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்கிறேன், நான் என்ன அணிய வேண்டும்?
என்று உங்கள் கேள்வி எதுவாக இருந்தாலும், இந்த MyFashionGPT மிக சிறந்த ரிஸல்ட்களை காண்பிக்கிறது. MyFashionGPT அம்சம் Myntra இன் முகப்புப் பக்கத்தில் அமைந்துள்ள 'M-Xplore' மிதக்கும் செயல் பட்டனில் அமைந்துள்ளது. உடனே ட்ரை செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications








