சொன்னது வேறு.. செய்வது வேறு.. ஏமாற்றுகிறாரா அம்பானி.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான அம்பானி இன்று சில முக்கியமான ரிலையன்ஸ் ஜியோ சார்ந்த அறிவிப்புகளை நிகழ்த்தினார். அந்த அறிவிப்பில் இருந்து ஜியோவின் இலவச சேவைகள் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளப்படுவதாகவும் உடன் ஆர்.ஜியோ சார்ந்த சில கட்டண திட்டங்கள் பற்றிய விவரங்களையும் அம்பானி வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் சற்றும் சிக்காத சில ஜியோ கட்டண திட்டங்கள் மைஜியோ ஆப்பில் காணப்படுவது தமிழ் கிஸ்பாட் அணியினர் கண்ணில் சிக்கியதும் அது சார்ந்த ஸ்க்ரீன்ஷார்ட் உடன் தகவல்களை இதோ உங்களுடன் பகிர்கிறோம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரீசார்ஜ் ஆப்ஷன்

ரீசார்ஜ் ஆப்ஷன்

மைஜியோ ஆப்பின் ஹோம் பக்கத்தில் மார்ச் 31-ஆம் தேதியுடன் இலவச சலுகைகள் முடியும் அறிவிப்பு வெளியாகிறது. உடன் கீழே ரீசார்ஜ் மற்றும் யூசேஜ் ஆப்ஷன்களை பார்க்க முடியும். அதில் ரீசார்ஜ் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பூஸ்டர்

பூஸ்டர்

அதனை தொடர்ந்து உங்கள் ஸ்க்ரீனில் ப்ரவுஸ் பிளான் என்ற தலைப்பின் கீழ் காம்போ மற்றும் பூஸ்டர் என்ற இரண்டு விருப்பங்களை உங்களால் பார்க்க முடியம். அதில் பூஸ்டர் கட்டண திட்டங்களின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுப்படியாகும் 6ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் ரூ.301/- திட்டம் மற்றும் ஒரு நாளுக்கு செல்லுப்படியாகும் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் ரூ.51/- என்ற இரண்டு திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ரூ.501/- திட்டம்

ரூ.501/- திட்டம்

காம்போ திட்டங்களின் கீழ் ஐஎஸ்டி மற்றும் எஸ்எம்எஸ் கட்டண திட்டங்களை காண முடிகிறது. அதில் ஐஎஸ்டி கட்டண திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து நிகழ்த்தும் ஐஎஸ்டி அழைப்புகளை மட்டுமே செய்ய முடியும் ரூ.501/- திட்டம் இடம்பெறுகிறது. ரூ.435.65/- பேச்சு நேரம் வழங்கும் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுப்படியாகும்.

ரூ.201/- ரீசார்ஜ்

ரூ.201/- ரீசார்ஜ்

எஸ்எம்எஸ் கட்டண திட்டத்தின் கீழ் ரூ.201/- ரீசார்ஜ் செய்வதின் மூலம் ரூ.175.1/- என்ற உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ் பேலன்ஸை பெற முடியும். இந்த கட்டண திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோ : கட்டண திட்டங்களின் விவரம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Myjio App Unannounced Tariff plans price validity and details. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot