1.5 கோடி பேர் டவுன்லோடு செய்த மைஜியோ ஆப்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகளைப் பயன்படுத்த கட்டாயம் இன்ஸ்டால் செய்ய வேண்டிய மைஜியோ ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் 10 மில்லியன் டவுன்லோடுகளை கடந்திருக்கின்றது. கூகுள் பிளே ஸ்டோரில் மைஜியோ ஆப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த மைஜியோ ஆப் கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அனைத்துச் சேவைகளை பயன்படுத்தவும், ஜியோ அக்கவுண்ட் மேம்படுத்த மைஜியோ ஆப் தேவைப்படும். 10 மில்லியன் டவுன்லோடு எண்ணிக்கையானது ஐஓஎஸ் கருவிகளைச் சேராது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆப்பிள் எவ்வித தகவலும் வழங்கவில்லை.
இந்த டவுன்லோடு எண்ணிக்கையில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களின் டெவலப்பர்களின் டவுன்லோடு அடங்கும். ப்ரியோரி தகவல்களின் படி 14.3 மில்லியன் முறை ஆண்ட்ராய்டு பதிப்புகளில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications