ஃப்ரீ அப்ளிக்கேஷன்களை வழங்கும் முத்தூட் குரூப்!

புதிய ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் அப்ளிக்கேஷன்களை வழங்கி வருகிறது வங்கி அல்லாத நிதி நிறுவனமாகிய முத்தூட் குரூப்.
இந்த முத்தூட் குழு தொழில் நுட்ப ரீதியில் பல வசதிகளை வழங்கி வருகிறது. முதலீடு செய்வது பற்றிய விவரங்களை மூத்தூட் குரூப் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் அப்ளிக்கேஷன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ளிக்கேஷன்களை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களில் எளிதாக படன்படுத்தி கொள்ளலாம்.

முதலீடு பற்றி மட்டும் அல்லாமல், பங்கு சந்தை பற்றிய தகவல்களையும் இந்த அப்ளிக்கேஷனில் பெறலாம். முத்தூட் குரூப் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்குகிறது. இதன் விலை பற்றிய தகவல்களையும் இந்த அப்ளிக்கேஷனில் தெரிந்து கொள்ள முடியும்.
பணம் முதலீடு செய்வது பற்றிய புதிய வழிகளை, புதுமையான வகையில் மக்களுக்கு ஊடகங்கள் மூலம் வழங்கி கொண்டே இருக்க வேண்டும் என்று முத்தூட் குழு இயக்குநர் அலெக்சாண்டர் ஜார்ஜ் முத்தூட் தெரிவித்திருக்கிறார்.
ஸ்மார்போன்களில் பயன்படுத்தப்படும் இந்த அப்ளிக்கேஷன்கள், மக்களுக்கு பணம் முதலீடு மற்றும் இது சம்மந்தமான விவரங்களை கொடுக்க பெரிதும் பயன்படும்.
மேலும் முத்தூட் குழு பற்றிய விவரங்களை, முத்தூட் வலைத்தளத்தில் எளிதாக பெறலாம். இங்கே கூறப்பட்டுள்ள முத்தூட் அப்ளிக்கேஷன்களை முத்தூட் வலைத்தளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
இந்த அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐடியூன்ஸிலும் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் விவரங்களை சொல்ல மொபைல் அப்ளிக்கேஷன் போன்றவை தேவைப்படுகிறது.
அந்த அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மூலம் வழங்குவதோடு, முத்தூட் குரூப் பிரத்தியேகமாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களையும் உருவாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications