Home
News

14 வயதில் அவருக்கு அந்த திறமை இருந்தது: எலான் மஸ்கின் அம்மா பகிர்ந்த முக்கியத் தகவல்.!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் குறித்து அவருடைய தாயார் போட்ட ட்வீட் பற்றி பலரும் வியப்புடன் பேசிவருகிறார்கள். மேலும் இது குறித்து விரிவானத் தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சேர்ந்த எலான் மஸ்க் வாகன

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா,விண்வெளி ஆய்வு நிறுவமான ஸ்பேகஸ் எக்ஸ் ஆகியவற்றை
நடத்தி வருகிறார். குறிப்பாக இவரது நிறுவத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பட்டியலில் எலான் மஸ்க் முதல்

அதேபோல் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தில் இருக்கிறார். குறிப்பாக இவருடைய
சொத்து மதிப்பு 265பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மஸ்க் ட்விட்டர் நிறுவனத்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின்பு ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க். மேலும் ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள

மேலும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக இருக்கும் ட்விட்டர் இனி தனிநபர் நிறுவனமாக செயல்படும். அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தில் கருத்து சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். அதேபோல் கருத்துச் சுதந்திரத்தை தான் நம்புவதாகவும் தன்னை மிக மோசமாக விமர்சிக்கும் நபரும் கூட ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

ல் எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ

சமீபத்தில் எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து எழுதி உள்ளார். அதில் என்னிடம்
பலமுறை கேட்கப்படுவதால் இதை மீண்டும் சொல்கிறேன். பல நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். பின்பு அந்த நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவேளை அவற்றின் பொருட்கள் மற்றும் சேவை சரியானதாக இல்லை என்றால் உடனே அந்த பங்குகளை விற்றுவிடுங்கள். மேலும் மார்க்கெட் நிலவரத்தை கண்டு அச்சம் கொள்ள கூடாது, இது நீண்டநாள்முதலீடாக அமைந்து பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கும் எனத் தெரிவித்தார் மஸ்க்.

லான் மஸ்கின் தாயார் மேயி

இந்நிலையில் எலான் மஸ்கின் தாயார் மேயி மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் எலானின் பங்குச்சந்தை குறித்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில் உன்னுடைய 14 வயதில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்படி கூறினாய். ஆனால் பங்குச்சந்தை நிபுணராக இருக்கும் நண்பர் ஒருவர் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டாம் என்றார். ஆனாலும் 1000 டாலர் மதிப்பிலான பங்குகுளை
வாங்கினேன். அது ஒரு கட்டத்தில் வீழ்ச்சியை சந்தித்தபோது பயம் காரணமாக விற்றுவிட்டேன். ஆனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன எனக் கூறப்பிட்டுள்ளார்.

முதன்முதலில் தான் வாங்கிய ஷேர்

அதேபோல் முதன்முதலில் தான் வாங்கிய ஷேர் வீழ்ச்சியை சந்தித்ததால் அதனை மஸ்கிக் பெயரில் மாற்றியதாகவும் பின்பு அதுவே மஸ்க் கனடா செல்ல உதவியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் மேயி மஸ்க். மேலும் எலான் 14 வயதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும்படி தனது தாய்க்கு அட்வைஸ் செய்தது குறித்து பலரும் வியப்புடன் பேசிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Musk told to buy stock at age 14: it continued to rise: Musk's mother: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X