எதிர்கால கருவிகளை சார்ஜ் செய்ய காளான்..!!

Written By:

ஆராய்ச்சியாளர்கள் போர்ட்பெல்லா காளான்களை கொண்டு தயாரித்திருக்கும் லித்தியம் அயன் பேட்டரிகள் குறைந்த விலையில் எளிமையாக தயாரிக்க முடியும் என்றும் இந்த முறை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.

எதிர்கால கருவிகளை சார்ஜ் செய்ய காளான்..!!

காளானில் இருக்கும் நானோகார்பன்கள் கிராஃபைட் சார்ந்த எதிர்முனைகளுக்கு மாற்றாக இருக்கும் என கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சென்ஜிஸ் ஒஸ்கான் தெரிவித்துள்ளார்.

எதிர்கால கருவிகளை சார்ஜ் செய்ய காளான்..!!

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் லித்தியம் பேட்டரி வகைகள் தயாரிப்பது சற்று கடினமான விஷயம் என்பதோடு இவை சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கவும் செய்யும். கிராஃபைட்களுக்கு மாற்றாக நானோகார்பன் பயன்படுத்துவது விலை குறைவு என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் நல்லதாகும்.

எதிர்கால கருவிகளை சார்ஜ் செய்ய காளான்..!!

நானோகார்பன் கொண்ட பேட்டரிகள் தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் பேட்டரிகளை விட அதிக திறன் கொண்டதாக இருக்கும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Read more about:
English summary
Mushrooms could power your smartphone. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot