Home
News

நல்லவங்க வாழ முடியாது! அது உண்மைதான் போல! புறாவை காப்பாற்றிய பெண்ணுக்கு வந்த வினை!

நாம் நல்லது செய்ய நினைத்து, அதுவே நமக்கு அடியாக விழுந்தால் எப்படி இருக்கும்? அப்படி வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள், பலரை நல்லது செய்யவே யோசிக்க வைத்துவிடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் மும்பையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

பொதுவாகவே பலருக்கு பறவைகளைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, பறவைகள் மீது மிகுந்த கரிசனம் வைத்திருப்பார்கள். இவர்களது கண்களில் ஏதாவதொரு பறவை அடிப்பட்டு கிடந்தால், வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவார்கள். அதன்பின் கயாமடைந்த பறவையை நன்றாக கவனித்து, அது குணமடைந்த உடன் மீண்டும் வெளியே விட்டுவிடுவார்கள். இப்படி பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

நல்லவங்களா இருக்கக்கூடாது! புறாவை காப்பாற்றிய பெண்ணுக்கு வந்த வினை

அவர்களுக்குப் பாராட்டு கூட தெரிவித்திருப்போம். ஆனால், அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்களே, அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது மும்பையில் நடந்தவொரு சம்பவத்தின் மூலம் உண்மைதான் போல என்று பலரை சிந்திக்க வைத்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின்
மஹாலக்ஷ்மியில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் த்வானி மேத்தா (Dhwani Mehta). இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் வழக்கமாக பணிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, சாலையோரம் அடிப்பட்டுக் கிடந்த புறா ஒன்றை பார்த்துள்ளார். இந்த புறாவை மீட்டு வீட்டிற்கு எடுத்து சென்று தண்ணீர் மற்றும் உணவு அளித்துள்ளார். ஆனால், அதை கவனித்துவர இவரும் நேரம் கிடையாது என்பதால், ஏதாவதொரு பறவைகள் மீட்பு அமைப்பிடம் (Birds Rescue Organization) ஒப்படைக்க முடிவு செய்தார்.

தனக்கு தெரிந்த எந்த பறவைகள் மீட்பு அமைப்பும் தெரியாது என்பதால், கூகுளில் (Google) தேடி உள்ளார். அப்போது, சிலரது மொபைல் நம்பர்கள், இவருக்கு கிடைத்துள்ளது. அந்த நம்பருக்கு கால் செய்து பேசியுள்ளார். அப்போது, எதிரே பேசிய நபர், இவருக்கு இமெயில் மூலம் சில ஆவணங்களை அனுப்பி பூர்த்தி செய்யுமாறு தெரிவித்துள்ளார். இவரும் அதைப் பூர்த்தி செய்துள்ளார். அதோடு 1 ரூபாய் புகார் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இவரும் நம்பி கட்டியுள்ளார்.

அதன்பின் அடுத்த நாள் நேரில் வந்து புறாவை மீட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த நாள் அப்படி யாரும் வரவில்லை. இவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை உடன் வேலைக்கு சென்றுவர ஆரம்பித்தார். இரண்டு நாள்களுக்குப் பின் இவர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது இவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.99,988 பணம் எடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு தொடர்பு கொண்ட கேட்டபோது, அவர்கள் சில தகவல்களை அளித்துள்ளனர். அப்போதுதான் அவருக்கு தனது வங்கி விவரங்களை அந்த பறவைகள் மீட்பு அமைப்பிடம் கொடுத்தது ஞாபகம் வந்துள்ளது.

இதையடுத்து உடனே மும்பை சைபர் கிரைம் (Cyber Crime) போலீசாரிடம் த்வானி மேத்தா புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mumbai Woman tries helping injured bird, ends up losing Rs 1 lakh to Cyber Crime Frauds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X