ஒடிபி நம்பரை உளறி 70 லட்சம் பறிகொடுத்த பெண்.!

அடுத்த ஒரு வாரத்தில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களிடம் வந்த 28 போன் அழைப்புகளில் அவர்கள் கேட்டபடி ஒடிபி நம்பரை சொல்லிவிட்டார் தஸ்னீம்.

|

இப்போது வரும் பல தொழில்நுட்பங்கள் நமக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பங்களை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். மும்மைபையில் வங்கி பரிவர்தனையின் போது பயனர்களுக்கு அனுப்பப்படும் இரகசிய ஒடிபி நம்பரை பகிர்ந்துகொண்ட பெண் ஒருவர் ரூ.7லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.

ஒடிபி நம்பரை உளறி 70 லட்சம் பறிகொடுத்த பெண்.!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையை சேர்ந்த தஸ்னீம் முஜாகர் மொடாக் என்ற பெண் ஒருவர் தனது செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர்களிடம் 28 முறை வங்கி ஒடிபி நம்பரை சொல்லியதன் விளைவு ரூ.7 லட்சம் வரை பணத்தை இழந்திருக்கிறார்.

ரூ.7.20 லட்சம் :

ரூ.7.20 லட்சம் :

கடந்த மே 17-ம் தேதி அன்று தஸ்னீம் முஜாகர் மொடாக் கணக்கில் ரூ.7.20 லட்சம் வரை பணம் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் செல்போனில் அழைத்த ஒருவர் தான் வங்கி அலுவலர் என்று கூறிக்கொண்டு, தஸ்னீம் ஏடிஎம் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்று
கூறியுள்ளார்.

ஏடிஎம்:

ஏடிஎம்:

எனவே தஸ்னீம் ஏடிஎம் மீண்டும் ஆக்டிவேட் செய்ய ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண் மற்றும் பெயர், சிவிவி எண்ணை கேட்ருக்கிறார் அந்த மர்ம நபர். தஸ்னீம் அவர்கள் அனைத்து விவரங்களையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

 ஒடிபி:

ஒடிபி:

மேலும் அடுத்த ஒரு வாரத்தில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களிடம் வந்த 28 போன் அழைப்புகளில் அவர்கள் கேட்டபடி ஒடிபி நம்பரை சொல்லிவிட்டார் தஸ்னீம். எனவே அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.6,98,973 திருடப்பட்டுவிட்டது.

ஆன்லைன்:

ஆன்லைன்:

அதன்பின்பு தஸ்னீம் வங்கி கணக்கில் பணம் குறைந்திருப்பதை அறிந்துகொண்டார், பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் ஆன்லைன் பரிவர்தனை பற்றி தனக்கு சுத்தமாகப் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

 காவல் துறையினர்

காவல் துறையினர்

காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 3சிம் கார்டுகளிலிருந்து தஸ்னீம் செல்போனுக்கு கால் அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மும்பை, கொல்கத்தா நொயடா சார்ந்த பகுதிகளில் பணம்
திருடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Mumbai woman shares OTP 28 times, loses Rs 7 lakh : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X