யூடியூப்பில் லீக்கான திரைப்படம்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மீது மும்பையில் வழக்கு பதிவு- இயக்குனர் புகார்!

|

நீதிமன்ற உத்தரவுப்படி, காப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் 5 நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா" என்ற திரைப்படம்

கூகுள் நிறுவனம் தனது "ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா" என்ற படத்தை யூடியூப்பில் பதிவேற்றுவதற்கு அனுமதியில்லாத நபர்களை கூகுள் அனுமதித்தாக திரைப்பட தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்மையைச் சேர்ந்த பாலிவுட் இயக்குனர் சுனில் தர்சன். இவர் "ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா" என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்திருக்கிறது. இந்த திரைப்படம் தற்போது வரை எந்த ஓடிடி தளம் உள்ளிட்டவற்றுக்கு உரிமம் அளிக்கப்படவில்லை.

மர்ம நபர்கள் யூடியூப்பில் பதிவேற்றம்

மர்ம நபர்கள் யூடியூப்பில் பதிவேற்றம்

இந்த நிலையில் "ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா" என்ற படத்தை மர்ம நபர்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இந்த படத்தை யூடியூப்பில் பதிவேற்ற அனுமதியில்லாத நபர்களை கூகுள் அனுமதித்ததாக திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் புகார் அளித்துள்ளார். மர்ம நபர்களை யூடியூப்பில் தனது படத்தை ஏற்ற அனுமதித்ததற்காக காப்புரிமை சட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்மை நீதிமன்றத்தில் சுனில் தர்ஷன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மும்மை நீதிமன்றத்தில் விசாரணை

மும்மை நீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்கு மும்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் காப்புரிமை சட்ட விதிகளை மீதியதாகவும் இதற்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் அந்த நிறுவனத்தின் 5 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யும்படியும் உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு

நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு

இதையடுத்து நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மும்பை அந்தேரி எம்ஐடிசி போலீஸார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன 5 அதிகாரிகள் மீது காப்புரிமை சட்டவிதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதித்தது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும்

குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும்

இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளம் தரவில்லை. சில சமூகவலைதளங்கள் கால அவகாசம் கோரின.

அரசின் பாதுகாப்பு விவகாரம்

அரசின் பாதுகாப்பு விவகாரம்

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் (இந்தியாவில் வசிக்கும் ஊழியர்கள்) ஆகியோரை நியமிக்க அனைத்து சமூகவலைதளத்திற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mumbai Police Filed Case Against Google CEO Sundar Pichai For Copyright Act Violation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X