கழிவறையில் ரகசிய கேமரா! மற்றுமொரு விடுதி உரிமையாளர் கைது

அங்கிருந்து தப்பித்த பெண் ஒருவர் டிபி ரோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

|

மும்பை கிர்கான் பகுதியில் நடைபெற்ற இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், 47 வயதான மகளிர் விடுதி உரிமையாளர் ஒருவர் அவ்விடுதியில் தங்கியிருந்த அப்பாவி பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்த பெண் ஒருவர் டிபி ரோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பை

மும்பை

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மும்பையை சேர்ந்த அந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பெண்களுக்கான உண்டு உறைவிட விடுதியை நடத்திக்கொண்டு அங்கேயே பெற்றொருடன் வசித்துவருகிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் ஓராண்டிற்கும் மேலாக அங்கு வசித்து வந்தாலும், கடந்த சில நாட்களாக அப்பெண்கள் தனியறையில் பேசிய உரையாடல்களை குற்றஞ்சாற்றப்பட்ட இந்த நபர் மிமிக்ரி செய்துள்ளார்.

சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர்.

சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர்.

துவக்கத்தில், அவர் தங்களின் உரையாடலை கேட்டிருக்கலாம் என நினைத்த பெண்கள், ஒருநாள் தங்கள் அறையில் சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர். அதை பெண்கள் கைக்குட்டை கொண்டு மறைத்த நிலையில், பின்னர் அங்கு வந்த விடுதி உரிமையாளர் கைகுட்டையை கருவியில் இருந்து நீக்குமாறு கூறியுள்ளார்.

புகார்

புகார்

இதனால் சந்தேகமடைந்த அப்பெண்கள், அக்கருவி தொடர்பாக இணையத்தில் தேடி அது உண்மையில் ஒரு கேமரா என்பதை கண்டறிந்தனர். கோபமும், அதிர்ச்சியும் அடைந்த பெண்கள் ,உடனடியாக டிபி ரோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான ஐபிசி பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, டிசம்பர் 19 அன்று விடுதி உரிமையாளரை கைது செய்தது காவல்துறை.

மின்விசிறி, ஜன்னல்கள்

மின்விசிறி, ஜன்னல்கள்

அதிர்ச்சிகரமாக, அந்த நபர் மின்விசிறி, ஜன்னல்கள், மின் சுவிட்ச்கள் மற்றும் கழிப்பறையிலும் கேமரா பொருத்தியதாக ஒப்புக்கொண்டார். அவருடைய லேப்டாப்பில் பழைய வீடியோக்களையும் கண்டறிந்துள்ளது போலீஸ் குழு. இந்த வீடியோக்கள் வேறு யாருடனாவது பகிரப்பட்டுள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும் வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.!

7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.!

சென்னை ஆதம்பாக்கம் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்திய வழக்கில் விடுதி உரிமையாளர் சம்பத்ராஜ் (எ) சஞ்சீவி (48) கைது செய்யப்பட்டார். ரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்ததை அந்த வீடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஹிடன் கேமரா டிடெக்டர் செயலியை ஸ்மார்ட் போனில் பதிவு செய்து கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த வழக்கில், அவர் விடுதியில் தங்கியிருந்த பெண்களை கிளுகிளுப்பாக காட்சி எடுக்க அதிநவீன தொழில் நுட்பத்தில் கூடிய வை-பை கேமரா பயன்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மகளிர் விடுதி:

மகளிர் விடுதி:

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தவர் சஞ்சீவி. இந்த குடியிருப்பு உரிமையாளர் தற்போது, வெளிநாட்டில் வசிக்கின்றார். இதற்கு மாத வாடகையாக ரூ. 24 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். விடுதி 2 ஆயிரத்து 100 சதுர அடியில் 3 படுக்கை அறை கொண்டது. இதில் 7 பெண்கள் தங்கியிருந்தனர்

மனைவி சித்தா மருத்துவர்:

மனைவி சித்தா மருத்துவர்:

இவரின் மனைவி சித்தா மருத்துவர். நோயாளிகளுக்கு சித்தா மருத்துவம் பார்க்க படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீடுதியின் ஒரு அறையில் போட்டு இருந்தார். மேலும், அந்த பெண்கள் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், ஒரு ஹாலை இவரின் மருத்துவ வேலைக்கு பயன்படுத்த அனுமதித்து இருந்தனர். பெண்கள் விடு திரும்பும் போது, இவர் அதற்கு முன் வெளியேறி விடுவார்.

பெண்களின் அழகு:

பெண்களின் அழகு:

தங்கியிருந்த பெண்கள் அழகாக இருந்ததால், இவருக்கு அந்த பெண்களை மயக்க நினைத்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து, நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில் நுட்பத்தை அறிந்துள்ளார்.

ஆன்லைனில் நுணுக்கம்:

ஆன்லைனில் நுணுக்கம்:

பெண்களின் அந்தரங்க காட்சிகளை எவ்வாறு படம் பிடிப்பது, அதற்கு எந்ததெந்த இடங்களில் கேமராக்களை பொறுத்த வேண்டும் என்றும் ஆன்லைனில் தெரிந்து கொண்டுள்ளார் சஞ்சீவி. அதன் பிறகு விடுதியில் குளியலறை, கழிப்பிடம், ஹால் என பல்வேறு இடங்களிலும் பொருத்தியுள்ளார்.

கேமரா விலை எவ்வளவு?

கேமரா விலை எவ்வளவு?

தலா ரூ.2500 கொடுத்து, அதநவீன கேமராக்களை வாங்கியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், அந்த கேமராக்களில் காட்சி பதிவு ஆகாது. நடமாட்டம் இருந்தால் அது தானாக பதிவு செய்து கொள்ளும்.

ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு:

ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு:

இவர் பொருத்தியிருந்த ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு இருந்துள்ளது. இதனால் 3 அல்லது 4 நாட்களில் பராமரிப்பு பணி என்று பெண்களின் அறைக்கு என்று கார்டை எடுத்து விட்டு புதிய கார்டை பொறுத்தி விடுவார்.

வை-வை கேமரா:

வை-வை கேமரா:

ஒரு சில கேமராக்களில் வை-வை தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்தியுள்ளார். இதனால் பதிவாகும் காட்சிகள் இவரின் செல்போனில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். அதில், எல்இடி பல்ப் போன்றும் கேராக்கள் இருந்துள்ளன. இதை போலீஸ் வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Mumbai PG owner held for fixing hidden camera in ladies bathroom: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X