வந்துச்சு, தொட்டேன், க்ளோஸ்.. ரிப்பீட்டு! பரவும் ஸ்பேம் மெசேஜ்.. 9 லட்சம் ரூபாய் இழந்த நபரின் கண்ணீர்!

|

தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே இது போன்ற ஏமாற்றங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது. அதன்படி தற்போது ஓய்வுபெற்ற யூனியன் வங்கி ஊழியர் ஒருவர், தனத்கு வந்த Link ஒன்றை கிளிக் செய்து ரூ.9.15 லட்சம் வரை இழந்திருக்கிறார்.

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் இணைய மோசடி வழக்கில் ரூ.9.5 லட்சத்தை இழந்திருக்கிறார்.

ஆன்லைன் மோசடியா என்று ஆச்சரியப்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது இணையவழி மோசடிகள் என்பது தினசரி செய்தியாக மாறிவிட்டது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் ஆன்லைன் மோசடிகள் செயல்படும் முறை என்பதும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது என்பது தான்.

பரவும் ஸ்பேம் மெசேஜ்கள்

பரவும் ஸ்பேம் மெசேஜ்கள்

தனிப்பட்ட தகவலை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் பணம், தனிநபர் விவரங்கள் திருடப்பட்டுவிட்டது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

ஒரு லிங்க்கை தெரியாமல் கிளிக் செய்தாலே போதும் மொத்த பணமும் அபேஸ் ஆகிவிடும் காலம் வந்துவிட்டது. அனைத்து லிங்க்களும் அதிகார்ப்பூர்வ தளம் போன்றே காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக எது உண்மை எது போலி என்று கண்டறிவது மிக சிரமமாகிவிட்டது.

ரூ.9.15 லட்சம் இழந்த நபர்

ரூ.9.15 லட்சம் இழந்த நபர்

மும்பை போரிவலி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் தான் 68 வயதான புஷ்பலதா பிரதீப் சிந்தேர்கர் என்பவர். இவர் வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்ததன் மூலம் இணைய மோசடிக்கு உள்ளாகி ரூ.9.15 லட்சத்தை இழந்திருக்கிறார். இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான அறிக்கைக் குறித்து பார்க்கலாம்.

புகார் பதிவு

புகார் பதிவு

மும்பை சேர்ந்த சிந்தர்கர் என்பவர் தனது தனியார் வங்கி வைப்புத் தொகை கணக்கில் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். இதையடுத்து வங்கியின் குறை தீர்க்கும் தளத்தின் மூலம் ஆன்லைனில் புகார் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் ஆன்லைன் புகார் பதிவு செய்யும் போது குறைதீர்ப்பு பிரிவு தளத்தில் சில பிழைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

வாட்ஸ்அப் லிங்க்

வாட்ஸ்அப் லிங்க்

இதையடுத்து சிந்தர்கர் இன் வாட்ஸ்அப் எண்ணிற்கு இணைப்பு ஒன்று வந்திருக்கிறது. இதில் சிந்தர்கர் தனது மொபைல் எண்ணை இணைத்ததாக கூறப்படுகிறது. சிந்தர்கர் பதிவிட்ட மொபைல் எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் தங்களுக்கு வாட்ஸ்அப் இணைப்பு அனுப்பி உள்ளதாகவும் அதில் தங்களது புகார்கள் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அழைப்பு விடுத்த மர்ம நபர்

அழைப்பு விடுத்த மர்ம நபர்

சிந்தர்கர் சந்தேகத்துடன் பல கேள்விகளை கேட்டிருக்கிறார். இருப்பினும் மறுபுறம் பேசிய நபர், இதுதான் புகார் பதிவு செய்யும் முறை உடனே தங்களது புகார்களை பதிவு செய்யும்படி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனக்கு வந்த லிங்க்கை சிந்தர்கர் சந்தேகத்துடன் ஓபன் செய்து பார்த்திருக்கிறார். அந்த தளம் அதிகாரப்பூர்வ பதிவுத் தளம் போல் காட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த தளத்தில் அவர் வங்கி இணைப்பையும் கடவுச்சொல்லையும் பதிவிட்டு உள்நுழைந்திருக்கிறார்.

பணம் டெபிட் செய்ததாக வந்த மெசேஜ்

பணம் டெபிட் செய்ததாக வந்த மெசேஜ்

இந்த முறை நடந்துக் கொண்டிருக்கும் போது அவரது கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆனதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதை பார்த்த அந்த நபர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார். இன்டெர்நெட் பேங்கிங் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்டவைகளை பதிவு செய்த பிறகு ஒரு செயலியை தான் பதிவிறக்கம் செய்தேன் இவை அனைத்தும் நடந்துவிட்டது என பாதிக்கப்பட்ட சிந்தர்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் சிந்தர்கர் தனது ஸ்மார்ட்போனை அணைத்துவிட்டு, தனது கணவரின் மொபைல் மூலம் தனியார் வங்கியின் வாடிக்கையாளர் உதவி எண்ணை அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் இதுகுறித்த கூடுதல் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் வரும் எந்தவொரு அதிகாரமற்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என தொடர்ந்து அறிவுறத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உங்கள் மொபைலில் இருக்கும் அதிகாரமற்ற ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்துவிடுங்கள். ப்ளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டும் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்வது நல்லது. ஆன்லைன் மோசடிகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவே எச்சரிக்கை இருப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

Best Mobiles in India

English summary
Mumbai Person Loses Over Rs.9 Lakh by Clicking Mysterious Link in Whatsapp: Beware From this Scam

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X