Home
News

ஆன்லைனில் ரூ.1.27 கோடி மோசடியா? அடேங்கப்பா! ஆட்டைய போட்டாலும் நியாயம் வேண்டாமா?

சமூக ஊடகங்களில் நீங்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், உங்களை முழுமையாக நம்ப வைத்து, உங்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற ஒரு கும்பலே இணையத்தில் முழு நேர வேலையாக சுற்றி திரியும் மோசடிக்காரர்கள் ஏராளமாகிவிட்டனர்.

சமீபத்தில், 53 வயதான மத்திய மும்பையில் வசிப்பவர் சைபர் மோசடிக்கு பலியாகி ஒரு துயரமான சூழ்நிலையை எதிர்கொண்டார். மும்பையில் உள்ள தனது குடியிருப்பை கணிசமான தொகையான ரூ.1.27 கோடிக்கு விற்ற பிறகு, புதிய சொத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தவரை மோசடிக்காரர்கள் ஆன்லைன் மூலம் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார்.

ஆன்லைனில் ரூ.1.27 கோடி மோசடியா? அடேங்கப்பா! ஆட்டைய போட்டாங்க!

துரதிர்ஷ்டவசமாக, ஒரு பகுதி நேர வேலையின் மூலம் அதிக வருமானம் தருவதாகக் கூறி அவரை ஏமாற்றிய மோசடியாளர்களிடம். அவர் தனது ஒட்டுமொத்த பணத்தையும் இழந்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, பகுதி நேர வேலையை வழங்குவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் இருந்து டெலிகிராமில் ஒரு செய்தியை அந்த 53 வயது ஆண் நபர் பெற்றுள்ளார்.

அந்த பெண்ணின் உத்தரவுப்படி, இணையத்தில் சில திரைப்படங்கள் மற்றும் ஹோட்டல்களின் இணைப்புகளை மதிப்பிட்ட பிறகு, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனக்கு அனுப்ப கோரியுள்ளார். ஆரம்பத்தில், ஒரு ஹோட்டலுக்கு நேர்மறையான மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டை வழங்கியதற்காக ரூ.7,000 அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்தபடியாக இன்னும் இதுபோன்ற வேலைகளை அந்த பெண் அவரை செய்ய வைத்துள்ளார்.

இறுதியில், அந்த நபரிடம் இருந்த முழு ரூ. 1.27 கோடியையும் முதலீடு செய்யும்படி அவரை சமாதானப்படுத்தினர். இதை செய்தால் கூடுதல் பணம் கிடைக்குமென்று அந்த பெண் ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் சம்மதிக்க வைத்துள்ளார். அந்த நபரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் வாங்கி, அதில் ரூ.10,000 டெபாசிட் செய்யும்படி கூறியிருக்கிறார். அவரது இ-வாலட்டை அணுகுவதற்கான லாகின் மற்றும் பாஸ்வோர்ட் விபரங்களையும் வழங்கியுள்ளார்.

இதற்கு பிறகும், அந்த நபர் மீண்டும் இணையத்தில் பல வீடியோ மற்றும் ஹோட்டல் தகவலை மதிப்பீடு செய்துள்ளார். அவரது கணக்கில் ரூ.17,372 வந்துள்ளது. அடுத்த செயல்முறையின் போது 32,000 ரூபாயை டெபாசிட் செய்யும்படி அவரிடம் கேட்கப்பட்டது. அதை அவர் உடனடியாக செய்தார். அவரது இ-வாலட்டை சோதனை இறுதியில் 55,000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக காண்பித்துள்ளது.

மீண்டும் அடுத்த முறை வேலைக்காக அந்த நபர் அடுத்த முறை பெரும் தொகையாக ரூ.48 லட்சத்தை வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இறுதியில், இ-வாலட் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாக காட்டியுள்ளது. ஆனால், அந்தத் தொகையை தனது சொந்தக் கணக்கிற்கு மாற்ற, கூடுதலாக ரூ.30 லட்சம் செலுத்த வேண்டும் என்று அந்தப் பெண் அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மே 18ம் தேதி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.76 லட்சத்தை மோசடி நபர் குறிப்பிட்ட கணக்குகளுக்கு மாற்றினார். பூர்த்தி செய்த போதிலும், வாக்குறுதி அளித்த நிதி கிடைக்கவில்லை. அவர் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, ​தொழில்நுட்ப பிழை காரணமாக கோளாறு எழுந்துள்ளது என்றும், கூடுதலாக பணம் செலுத்தினால், மொத்த பணமும் மீண்டும் கிடைக்குமென்று கூறியுள்ளார்.

​இறுதியில் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நபர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள 8 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. எஃப்ஐஆர் படி, இந்த ஊழலில் ஈடுபட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.1.27 கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த நபர் இழந்த பணம் இன்னும் கிடைக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Mumbai man sells flat for Rs 1.27 crore loses all money via online scam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X