கிகி சேலஞ்ச்’சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கிடைத்த வித்தியாசமான தண்டனை.!

குறிப்பாக பகல் 11 மணி முதல் 2மணி வரை பின்பு மாலை 3 முதல் 5 மணிவரை இந்தப் பணிகளை செய்ய வேண்டும்என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

சில இடங்களில் கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடுவது, பைக்குகளில் சாகசம் செய்வது என பல வித்தியசமான செயல்பாடுகளில பலர் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக கனடாவை சேர்ந்த ராப் பாடகர் கிரஹாமின் in my feelings என்ற பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் துவங்கியது.

கிகி சேலஞ்ச்’சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கிடைத்த வித்தியாசமான தண்டனை.!

பின்பு சேலஞ்ச்-ஐ ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி, பின்பு இதைத் தொடர்ந்து வில் ஸ்மித் வீடியோ ஒன்றை அன்மையில் டிவிட்டரில் வெளியிட இளைஞர் மத்தியில் இது மிகவும் பிரபலமானது.

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச்

மேலும் இந்த கிகி சேலஞ்ச் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, குறிப்பாக இந்தியாவில் உள்ள சில இடங்களில் இளைஞர்கள், பெண்கள் என சாலையில் இந்த சாகசத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கிகி சேலஞ்ச் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக தான் உள்ளது.

மும்பை ரயில் நிலையம்:

மும்பை ரயில் நிலையம்:

இந்தியாவில் கிகி சேலஞ்ச் என்ற பெயரில் பொது இடங்களில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்வேறு மாநில காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் மும்பை ரயில் நிலையத்தில் மூன்று இளைஞர்கள் நடைமேடையில் கிகி சேலஞ்ச் என்ற பெயரில் சாகசம் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவேற்றியுள்ளனர்.

காவல்துறையினர்

காவல்துறையினர்

இளைஞர்கள் யூடியூபில் பதிவேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது, இதை தொடர்ந்து மும்பையை சேர்ந்த நிஷாந்த், துருவ், ஷ்யாம் என்ற மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தண்டனை

தண்டனை

மேலும் அந்த இளைஞர்கள் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படத்தப்பட்டனர், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வசை எனப்படும மும்பை ரயில் நிலையத்தை மூன்று நாட்கள் சுத்தம் செய்யம் வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

பகல் 11 மணி

பகல் 11 மணி

குறிப்பாக பகல் 11 மணி முதல் 2மணி வரை பின்பு மாலை 3 முதல் 5 மணிவரை இந்தப் பணிகளை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிகி சேலஞ்சில் கைது செய்யப்பட்டு தண்டனை கொடுப்பது இதுவே
முதல்முறை ஆகும்.

Best Mobiles in India

English summary
Mumbai court orders Kiki challenge takers to clean Vasai railway station: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X