Home
News

ஒரு மொபைல் போன்-ற்காக மருத்துவ பிரதிநிதியை கொன்ற 19வயது இளைஞன்.!

ரயிலில் பயணம் செய்த ஒருவர் தன் கையில் இருந்து தவறி விழுந்த கைப்பேசியை மீட்க முயன்ற பொது தவறி கீழே விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

By Sharath

இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்பத்திற்கு நாம் அடிமையாகிவிட்ட நிலையில் நம் கைப்பேசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித உயிர்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே சோகமான உண்மை.

இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வு நம் நாட்டின் முக்கிய நகரமான மும்பையில் சில தினங்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது. ரயிலில் பயணம் செய்த ஒருவர் தன் கையில் இருந்து தவறி விழுந்த கைப்பேசியை மீட்க முயன்ற பொது தவறி கீழே விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

மருத்துவ பிரதிநிதி

மருத்துவ பிரதிநிதி

இந்தச் சம்பவத்தை விசாரித்த அதிகாரி கூறியதாவது: நாசிக் நிறுவனத்தின் மருத்துவ பிரதிநிதி சேட்டன் அஹிராவ்(35) என்பவர் மத்திய ரயில் நிலையத்தின் உள்ள தியா ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலில் கதவு அருகில் நின்று பயணம் செய்து கொண்டிருந்தார்.

கள்வா ரயில்நிலையம்

கள்வா ரயில்நிலையம்

கள்வா ரயில்நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பிய பொழுது அஜய் சோலங்கி(19) இளைஞன், அஹிராவின் மணிக்கட்டில் பலமாக தாக்கி அவரது கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். அந்த கைப்பேசியை மீட்க ரயிலில் இருந்து குதித்த அஹிராவ் தண்டவாளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். பின் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிர் இழந்து விட்டார்.

சிசிடிவி உதவியுடன் விசாரணை

சிசிடிவி உதவியுடன் விசாரணை

முதலில் இந்த வழக்கு கதவருகில் பயணித்த பயணி தவறுதலாகத் தடுமாறி கீழே விழுந்து பலியாகி விட்டார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பின் கீழே விழுந்த அஹிராவ் இன் கைப்பேசி கிடைக்காமல் போனதால் போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்க்கும்போது தான் சோலங்கி கைப்பேசியை அடித்துப் பறித்து சென்றது தெரியவந்தது.

குற்றப்பிரிவு 304 மற்றும் 397

குற்றப்பிரிவு 304 மற்றும் 397

சம்பவம் நடந்த அடுத்த நாள் அருகில் இருந்த கவ்லா சேரி பகுதியில் காவல்துறையினர் குற்றப்பிரிவு 304 மற்றும் 397 பிரிவின் கீழ் சோலங்கியை கைது செய்துள்ளனர். இவர் இதற்கு முன்பு வேறொரு கைப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் பதட்டம்

பயணிகள் பதட்டம்

இந்தச் சம்பவத்தால் பயணிகள், மிகுந்த பதட்டமும் ரயில் நிலைய பாதுகாப்பின் மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக ரயில் ஆய்வாளர் சுபாஷ் குப்தா கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Mumbai: 35-Year-Old Man Jumps Off The Train To Save Mobile, Falls On Tracks, Dies : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X