Home
News

ரூ.10,000 அபராதம்.. PAN கார்டு ரூல்ஸ்.. உடனே இதை பண்ணுங்க.. இல்லனா பணம் மட்டுமில்ல.. சிக்கலுக்கு மேல சிக்கல்!

பான் கார்டு (PAN Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் இந்த ரூ.10,000 அபராதம் செலுத்தும் விதி பொருந்துகிறது. இதை தவிர்க்க ஆன்லைனில் சில நிமிடங்களில் சமர்ப்பிப்பை செய்து முடிக்கலாம். யாரெல்லாம், இந்த சமர்ப்பிப்பை செய்ய வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?

இது ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கு பொருந்துகிறது. ஆதார் கார்டை போலவே பான் கார்டும் ஒருவருக்கு ஒன்றுதான் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஆதார் கார்டுடன் இணைக்கப்படாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பலரிடம் இருக்கிறது. இதை தெரியாமலேயே பலர் வைத்திருக்கின்றனர்.

ரூ.10,000 அபராதம்.. PAN கார்டு ரூல்ஸ்.. உடனே இதை பண்ணுங்க.. இல்லனா?

அப்ளை செய்யும்போது ஏற்படும் குழப்பம் மற்றும் தவறுகளால் கூடுதலாக பான் கார்டுகளை பெறுவோர்களும் இருக்கிறார்கள். இது வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 152B இன் கீழ் குற்றமாகும். அதேபோல கூடுதல் பான் கார்டை வைத்து பேங்க் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை செய்யும்போது, மாட்டிக்கொண்டால் ரூ.10,000 அபராதம் மட்டுமல்ல, கூடுதல் சிக்கல்களுக்கும் உள்ளாக வேண்டும்.

ஆகவே, உங்களிடம் ஒரு பான் கார்டுக்கு மேல் இருந்தால், அதை பயன்படுத்தவில்லை என்றாலும் உடனடியாக என்எஸ்டிஎல் பேர்ட்டலில் (NSDL Portal) சமர்ப்பிப்பு செய்துவிடுங்கள். இதை ஆன்லைனில் எளிதாக செய்து முடிக்கலாம், அதேபோல ஆப்லைனிலும் சமர்ப்பிக்க முடியும். இருப்பினும், ஆன்லைன் கூடுதல் சுலபமாக இருக்கும். ஆகவே, அதை பார்ப்போம்.

1. என்எஸ்டிஎல் போர்ட்டலுக்கு செல்லுங்கள். அப்ளை பான் விருப்பத்துக்கு செலுங்கள். அதில் அப்ளிகேஷன் டைப்பின் (Application Type) கீழ் "ஏற்கனவே உள்ள பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தம்/பான் கார்டு ரீபிரிண்ட் (Changes or Correction in existing PAN Data/Reprint of PAN Card)" என்னும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

2. இப்போது படிவம் தோன்றும். அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் கொடுங்கள். இப்படி பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பித்த பிறகு, பான் கார்டில் பதிவு செய்யப்பட்ட இமெயிலுக்கு யுனிக் டோக்கன் நம்பர் (Unique Token Number) அனுப்பி வைக்கப்படும். இந்த நம்பர் முக்கியமானதாகும். ஆகவே, குறித்து வைத்து கொள்ளுங்கள்.

3. இப்போது வெரிபிகேஷன் இருக்கும். இதில் ஆதார் பேஸ்டு ஈ-கேஒய்டி/ஈ-சைன் (KYC/e-Sign) மூலம் பேப்பர்லெஸ் வெரிபிகேஷன் செய்யலாம்.டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் (Digital Signature Certificate) மூலம் வெரிபிகேஷன் செய்யலாம். ஆவணங்களை நேரடியாக அனுப்பி வைத்தும் வெரிபிகேஷனை செய்து கொள்ளலாம்.

4. இப்போது, உங்களிடம் கூடுதலாக இருக்கும் பான் கார்டு விவரங்கள் கேட்கப்படும். இதுவொரு பாக்ஸ் போல டிக் செய்யும்படி இருக்கும். இதில் பான் 1, பான் 2, பான் 3 மற்றும் பான் 4 என்று இருக்கும். இதில் கூடுதலாக இருக்கும் பான் கார்டு விவரங்களை கொடுத்துவிடுங்கள். அடையாளச் சான்று, இருப்பிட சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகியற்றை சமர்பிக்க வேண்டும்.

5. இப்போது, வெரிபை மற்றும் பேமெண்ட் செயல்முறையை செய்து முடிக்க வேண்டும். நீங்கள் கொடுத்த விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள். பிறகு பேமெண்ட் விருப்பத்துக்கு செல்லுங்கள். இதில் கிரெடி கார்டு, டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பேமெண்ட் விருப்பங்கள் இருக்கும். இதை செய்து முடித்து கொள்ளுங்கள்.

6. பேமெண்ட் செய்த பிறகு உங்களுக்கு ஒப்புதல் டாக்குமெண்ட் கொடுக்கப்படும். இதை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளுங்கள் அல்லது பிரிண்ட் எடித்து வைக்கலாம். அவ்வளவுதான் சமர்ப்பிப்பு முடிந்துவிட்டது, அடுத்த 15 நாட்களுக்குள் இந்த சமர்ப்பிப்பு அதிகாரிகளால் வெரிபிகேஷன் செய்யப்படும். ஒரு பான் கார்டு தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Multiple PAN Card Rules Rs 10000 Penalty For Additional PAN Card Check How to Surrender Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X