கொற்கை அகழாய்வில் கிடைத்த அரிய வகை பொக்கிஷம்.. வளரும் தமிழர்களின் பெருமை..

|

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள கொற்கை என்ற கிராமத்தில் நடைபெறும் அகழாய்வு ஆராய்ச்சியில் அரிய வகை பொருட்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது நடைபெற்று வரும் ஆராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன பல அடுக்கு கொண்ட வடிகட்டும் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்னும் பல கடல் சார் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொற்கை அகழாய்வில் கிடைத்த அரிய வகை பொக்கிஷம்.. தமிழர்களின் பெருமை..

இந்த புதிய கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினரை வியக்கவைத்துள்ளது. தற்பொழுது கொற்கையில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி வரும் 4 இடங்களில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த குழிகளில் இருந்து, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்டவை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது, சுடுமண்ணால் ஆன பல அடுக்கு கொண்ட திரவப் பொருட்களை வடிகட்டும் பெரிய குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற பல குழாய்கள் இந்த ஆராய்ச்சியில் மொத்தமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் ஒவ்வொன்றும் 27 சென்டி மீட்டர் உயரம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த குழாயில் திரவப் பொருட்களை வடிகட்டும் வகையில் சிறிய துளைகள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது.

அதேபோல், கொற்கை அகழாய்வுப் பணியில் சங்கு உள்ளிட்ட கடல் சார்ந்த பொருட்களும் தற்பொழுது கிடைத்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள பொக்கிஷங்கள் மிகவும் அரிய வகை கண்டுபிடிப்பு என்றும், மேலும் தொடரும் ஆராய்ச்சியில் இன்னும் என்ன-என்ன பொருட்கள் கிடைக்கும் என்பது தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த ஆர்வத்தில் தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Multi Layer Filter Pipe Of Rare Material Found In Kokarai Excavation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X