முகேஷ் அம்பானியின் இரண்டு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

மேலும் உலகின் செல்வந்தர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் தற்போது பேஸ்புக் அதிபர் மார்க்குக்கு பதிலாக ஹாத்வே பஃபெட் இடம்பெற்றுள்ளார்.

|

முகேஷ் அம்பானி உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 15 வது இடத்தில் உள்ளார், வால்மார்ட்டின் ஜிம் வால்டன் மற்றும் ராப் வால்ட்டனுக்கு பின்னால் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வர்த்தக துறையில் அன்றாடம் நிகழும் மாறுதல்களைக் கொண்டு சில அமைப்புகள் உலகின் 500 செல்வந்தர்கள் வரிசையை அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் இரண்டு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

அதன்படி நியூயார்க் பங்கு வரத்தகச் சந்தையில் ஏற்படும் மாறுதல்களைப் பொறுத்து பட்டியலில் தினமும் பல்வேறு மாறுதல்கள் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் செல்வந்தர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் தற்போது பேஸ்புக் அதிபர் மார்க்குக்கு பதிலாக ஹாத்வே பஃபெட் இடம்பெற்றுள்ளார்.

முகேஷ் அம்பானி:

முகேஷ் அம்பானி:

ரிலையன்ஸ் இந்தியாவின் பங்குகள் தற்சமயம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் முகேஷ் அம்பானியின் இரண்டு நாள் சம்பளம் என்னவென்று தற்சமயம் ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி அவரின் இரண்டு நாள் சம்பளம் 9300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சீனா

சீனா

அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மொத்தம் 819 கோடீஸ்வரர்களும், அடுத்த இடத்தில் அமெரிக்காவில் 571 கோடீஸ்வரர்களும் வாழ்கின்றனர். ஒட்டுமொத்தமாக உலக அளவில் 69 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 694 கோடீஸ்வரர்களும் உள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு புதிதாக 437 கோடீஸ்வரர்கள் உருவாகி, பட்டியலில் இணைந்துள்ளனர்.

இளம் கோடீஸ்வரர்கள்

இளம் கோடீஸ்வரர்கள்

40 வயது அல்லது 40 வயதுக்கும் குறைவாக உலக அளவில் மொத்தம் 85 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதில் நார்வே நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு மட்டும் 130 கோடி(ரூ.8466கோடி) சொத்துக்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் அவரின் தந்தையின் மூலம் கிடைத்ததாகும்.

முதல் கோடீஸ்வரர்

முதல் கோடீஸ்வரர்

உலகின் முதல் கோடீஸ்வரராக, அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பிஜோஸ் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக, வாரன் பஃபெட், பில் கேட்ஸ்உள்ளனர். அதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்ட் அமால்ட், இன்டிடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமான்சியா ஆர்டீகா, அமெரிக்கா மோவில் நிறுவனத்தின் கார்லோஸ் சிலிம் ஹெலு, ஆரக்கிள் நிறுவனத்தில் லாரி எலிஸன், கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், புளூம்பெர்க் நிறுவனத்தின் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர். இதில் முதல் 10 இடங்களில் 7 பேர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani’s Wealth Jumped up by Rs 9300 Crore Within Two Days These Billionaires Left Behind : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X