ஜியோ, பிஎஸ்என்எல்.. 365 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. எது அதிக சலுகை வழங்குகிறது.. இதோ முழு விவரம்..
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை.
அதாவது இப்போதும் கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இதில் கிடைக்கும்.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் நன்மையும் உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3599 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேசமயம் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என ஜியோ நிறுவனம். நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ரூ.3599 திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். . ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. எனவே பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. எனவே இப்போதே இதுபோன்ற ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








