Home
News

Jio பயனர்களுக்கு 'லட்டு' மாதிரி ரூ.50 கேஷ்பேக் கொடுக்கும் திட்டம்.. தினமும் 2ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது ஜியோ .

எனவே தான் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ஒரு பிரபலமான திட்டத்தில் இன்னும் ரூ.50 கேஷ்பேக் சலுகையை வழங்கி வருகிறது. அந்த திட்டத்தின் விலை மற்றும் அதில் என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

Jio பயனர்களுக்கு 'லட்டு' மாதிரி ரூ.50 கேஷ்பேக் கொடுக்கும் திட்டம்..

ஜியோவின் ரூ.1028 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் சலுகை பெறமுடியும். குறிப்பாக இந்த ஒரு திட்டத்தில் மட்டும் தான் இது போன்ற கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவும் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். அறியாதோர்களுக்கு, ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவின் கீழ் 10 இலவச ஹோம் டெலிவரி உட்பட பல நன்மைகள் கிடைக்கும். சரி இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

அதன்படி ஜியோ ரூ.1028 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1028 prepaid recharge plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.1028 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதன்படி ஜியோ ரூ.1028 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம்.

தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும் கிடைக்கும். ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.1028 திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ரூ.1028 திட்டத்துக்குப் போட்டியாக ஏர்டெல் ரூ.1029 திட்டத்தை வைத்துள்ளது. இப்போது இந்த ஏர்டெல் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

Jio பயனர்களுக்கு 'லட்டு' மாதிரி ரூ.50 கேஷ்பேக் கொடுக்கும் திட்டம்..

ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த ஏர்டெல் திட்டம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle)உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

photo credit: Jio, vecteezy

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambanis Jio has a prepaid plan offering Rs.50 cashback: check details and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X