தலைவர் பதவியிலிருந்து விளக்கப்படும் அம்பானி! காரணம் என்ன தெரியுமா?

|

பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்களின் தலைமை பொறுப்பான சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் ஒரே நபர் இருக்கக் கூடாது என்று செபி அமைப்பு கடந்த ஆண்டே உத்தரவிட்டிருந்தது. இரண்டு பதவிகளுக்கும் வெவ்வேறு தனித்தனி நபர்கள் தான் அமர்த்தப்பட வேண்டும் என்று செபி உறுதிபட தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

அம்பானியை தாக்கிய செபி உத்தரவு

அம்பானியை தாக்கிய செபி உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களில் சுமார் 200க்கும் அதிகமான நிறுவனங்களில் இந்த மாற்றத்தைச் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று செபி தெரிவித்துள்ளது. அதேபோல் அந்த நிறுவனங்களில் இந்த மாற்றங்களை செய்து முடிக்க செபி, 2020 ஏப்ரல் 1-ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்

குழப்பத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்

இது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை என்பதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தற்பொழுது யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள யாரும் இந்த பதவியை வகிக்க முடியாது என்பதனால், யார் இந்த தலைமை பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்துள்ளது.

பொங்கல் சிறப்பு திரைப்படமாக தர்பார்: கேபிள் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு- எங்கே தெரியுமா?பொங்கல் சிறப்பு திரைப்படமாக தர்பார்: கேபிள் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு- எங்கே தெரியுமா?

இந்த பதவிக்கு யார் தகுதியானவர்?

இந்த பதவிக்கு யார் தகுதியானவர்?

இதனால் தற்பொழுது முகேஷ் அம்பானி தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, அந்த பதவியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிகில் மெஸ்வானி மற்றும் முகேஷ் அம்பானியின் நம்பிக்கைக்குரிய அவருடைய வலதுகையுமான மனோஜ் மோடி ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு செல்லும் என்று செய்திகள் பரவிவருகிறது.

பதவியிலிருந்து விளக்கப்படும் அம்பானி

பதவியிலிருந்து விளக்கப்படும் அம்பானி

மேலும், ஹிட்டல் மற்றும் பி.எம்.எஸ். பிரசாத் ஆகியோருக்கும் வாய்ப்புள்ளதாகச் செய்திகள் பரவி வருகிறது. இந்த முக்கிய பொறுப்பில் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு முகேஷ் அம்பானி, நிறுவனத்தின் `Non-Executive Director' பதவியில் இருப்பார் என்று தெளிவாக தெரிகிறது.

கூகுள் பே சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படிகூகுள் பே சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படி

தற்போதைய சூடான செய்தி

தற்போதைய சூடான செய்தி

பஜாஜ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட், ஸ்ரீசிமென்ட்ஸ், யூ.பி.எல், லிபின் உள்ளிட்ட நிறுவனங்களும் இதே நிலை தான். ரிலையன்ஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ பதவியில் இருக்க மாட்டார் என்பது தற்போதைய சூடான செய்தியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Will Be In The Non-Executive Director Designation After April 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X