Home
News

அந்த மனசு தான் சார் கடவுள்! ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான கிஃப்ட் கொடுத்த முகேஷ் அம்பானி! யாருப்பா அது?

ஜியோ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட ஜியோ டெலிகாம் நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய சாதனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது ஊழியருக்கு ரூ.1500 கோடி மதிப்பிலான ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துள்ளார். இப்போது அந்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன? யார் அந்த ஸ்பெஷல் ஊழியர் என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான கிஃப்ட் கொடுத்த முகேஷ் அம்பானி!

அதாவாது முகேஷ் அம்பானி எப்போதுமே தனது தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை அறிவிப்பதில் தாராள மனப்பான்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

குறிப்பாக அந்த வீட்டை பெற்ற மிகவும் அதிர்ஷ்டக்கார ஊழியர் பெயர் மனோஜ் மோடி. அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பரான மனோஜ் மோடி தொடக்கம் முதலே அந்த நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். மேலும் முகேஷ் அம்பானியின் தந்தை ரிலையன்ஸ் நிறுவனத்தையே நடத்தியபோதே மனோஜ் மோடி அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மும்பையில் முகேஷ் அம்பானியும் மனோஜ் மோடியும் சேர்ந்து கெமிக்கல் டெக்னாலஜி படித்திருக்கின்றனர். பின்பு 40 ஆண்டுகளாக ரிலையன்ஸ்
நிறுவனத்தில் பணியாற்றும் மனோஜ் மோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீடா அம்பானியின் நண்பராக இருந்துவருகிறார். தற்போது அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, மகள் ஈஷா அம்பானிக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான கிஃப்ட் கொடுத்த முகேஷ் அம்பானி!

இப்படிப்பட்ட மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி 1500 கோடி ரூபாய் வீடு ஒன்றைக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி. அதுவும் மிகவும் பிரபலமான தென் மும்பை பகுதியில் உள்ள நெபன்ஸி ரோட்டில் 22 மாடிகள் கொண்ட வீட்டை கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. குறிப்பாக இந்த வீட்டில் உள்ள பர்னிச்சர்கள் இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த வீட்டை மனோஜ் மோடியின் குடும்பத்தினர் விருப்பத்துக்குத் தக்கபடி அம்பானி கட்டிக்கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீட்டில் மனோஜ் மோடி குடும்பத்தினர் அனைவரும் வசிக்கின்றனர். பின்பு முதல் ஏழு மாடி கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வீட்டின் 14-வது மாடியை மனோஜ் மோடி தனது அலுவலகமாக மாற்றியிருக்கிறார்.

அதன்பின்பு 15-வது மாடி மருத்துவமனை போன்று மாற்றப்பட்டிருக்கிறது. இதுதவிர விளையாடுவதற்கு வசதி, ஸ்பா, பார்ட்டி அறைகள், நீச்சல் குளம், தியேட்டர் போன்றவை இதில் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல் மனோஜ் குடும்பத்துக்கு வேலை செய்ய சுமார் 175 பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதோடு இஸ்ரேல் கம்பெனி மனோஜ் மோடி வசிக்கும் கட்டடத்துக்குப் பாதுகாப்பு கொடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான கிஃப்ட் கொடுத்த முகேஷ் அம்பானி!

மேலும் இந்த வீட்டின் ஒவ்வொரு மாடியும் 8000 சதுர அடி கொண்டது. அதேபோல் மொத்தம் 1.7 லட்சம் சதுர அடி கொண்ட இந்த வீட்டுக்கு கிறிஸ்டென்ட் விருந்தாவன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த வீட்டிற்கு தான் குடிபெயர்ந்த நிலையில் இதற்கு முன்னர் தான் வசித்த இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்பை ரூ.41.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் மனோஜ் மோடி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani who gifted a house worth Rs 1,500 crore to an employee: Who is it? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X