Just In
- 29 min ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 29 min ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 59 min ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 9 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, நேற்று (ஏப்ரல் 19, வியாழன் அன்று) அவரின் 61-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, நேற்று (ஏப்ரல் 19, வியாழன் அன்று) அவரின் 61-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் தரவரிசைப்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது "பாசம்" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. அன்றிலிருந்து இன்று வரையிலாக அம்பானி பற்றிய தசெய்திகளை, கவல்களை மற்றும் விவரங்களை தேடித்தேடி படிக்கின்றோம் அல்லவா.?
அப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியை பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு புட்டுப்புட்டு வைக்கப்போகிறோம்.
01. வியாபாரத்திற்கு கிரிக்கெட்; மனதிற்கு.?
ஐபில் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அம்பானியின் பள்ளி நாட்களில் அவருக்கு பிடித்த விளையாட்டு எதுவென்று தெரியுமா.? - அது நமது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தானாம். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹாக்கி மீதான அதீத ஆர்வத்தினால் தான் அம்பானி தனது படிப்பை கோட்டை விட்டாராம்.!
02. அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் யாரென்று கூறினால் நம்புவீர்களா.?
"வியாபாரம் என்பது ஒரு யுத்தம், அதில் வியாபாரிகள் தான் போராளிகள்" என்பது தான் தற்கால சந்தைகளின் நிலைப்பாடு. ஆனால் அதெல்லாம் வளர்ந்த பின்னர் தான், பள்ளி பருவத்தில் இல்லை என்பதற்கு அம்பானியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தற்கால வணிகத் தொழிலதிபர்கள் ஆன ஆதி கோத்ரேஜ் மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர்கள் முகேஷ் அம்பானியின் பள்ளி தோழர்கள் ஆவார்கள், அவர்கள் அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸூம் கூடவாம்.!
03. அம்பானி செய்து பார்க்காத ஒரு காரியம்.!
முகேஷ் அம்பானி ஒரு டீடோட்டலர் ஆவார். அம்பானி அவரின் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவைத்தது இல்லையாம். மேலும் அவர் ஒரு சுத்தமான சைவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட் ஏ மேன்.?!
04. சத்தமின்றி சாதிக்கும் திறன்.!
முகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.
05. ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!
உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தகாரமும் நம்ம அம்பானி தான். தெற்கு மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
06. மோடிக்கு சமம்.!
ஹாக்கியை நேசித்தது போலவே முகேஷ் அம்பானி, கார்களின் மீதும் காதல் கொண்டிருக்கிறார். இதுநாள் வரையிலாக, மொத்தம் 168 கார்களை அவர் சொந்தமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கார்களில் புல்லட் ப்ரூப் மற்றும் குண்டு வெடிப்பை தாக்குப்பிடிக்க கூடிய BMW 760LI காரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை காரை தான் பிரதமர் நரேந்திர மோடியும் பயன்படுத்துகிறார். மேலும் அம்பானியிடம் மெர்சிடஸ்-மேபேக் பென்ஸ் எஸ்660 கார்ட், ஆஸ்டன் மார்டின் ராபைட், ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய கார்களையும் கொண்டுள்ளார்.
07. இது அம்பானியால் மட்டுமே முடியும்.!
"எங்க லோக்கல் எம்எல்ஏ-வே ரெண்டு கார் வச்சி இருக்காரு.! அம்பானி கார் வைத்து இருப்பதெல்லாம் ஒரு மேட்டரா.?" என்று நீங்கள் கேட்டால் - கரெக்ட் தான்.! முகேஷ் அம்பானி ஒரு படி மேல் சென்று பால்கான் 900 என்கிற தனி விமானம் ஒன்றையும் கொண்டுள்ளார், அதில் ஒரே நேரத்தில் வெறும் 14 பயணிகள் மட்டுமே பறக்க முடியும். பால்கான் 900 விமானத்தின் இன்றைய மதிப்பு சுமார் 43.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது தவிர, முகேஷ் அம்பானி ஒரு ஏ -319 விமானமும் உள்ளது. இது 180 பயணிகளை சுமந்து பயணிக்கும் திறனை கொண்ட ஒரு விமானமாகும். இதன் மதிப்பு 230 கோடி ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிக ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த தனியார் ஜெட் ஆன, போயிங் பிசினஸ் ஜெட் 2 ஒன்றையும் அம்பானி கொண்டுள்ளார். இதன் மதிப்பு சுமார் 73 மில்லியன் டாலர்கள் ஆகும்.
08. இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்.!
இந்தியாவிற்கு முகேஷ் அம்பானி எவ்வளவு முக்கியமே என்பதை நீங்கள் அறிவீர்களா.? இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களில் Z- வகை பாதுகாப்புடன் உலா வரும் ஒரே தொழில் அதிபர் முகேஷ் அம்பானிதான்.
09. வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கொண்டே நாம் பார்த்த வேலை.!
அம்பானி தலைமையின் கீழ் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய டெலிகாம் துறையில் மாபெரும் கட்டண புரட்சியை ஏற்படுத்தியது என்பதற்கு நீங்களும் நாங்களும் தான் சாட்சி. அறிமுகம் ஆன அடுத்த 30 நாட்களால் சத்தமில்லமால் ஒரு விஷயம் நடந்தது அது என்னவென்று தெரியுமா.? இது ஏமாற்று வேலை.? அம்பானியை நம்ப வேண்டாம் என்று சந்தேகப்பட்டுக் கொண்டே பெரும்பாலான இந்தியர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைக்குள் நுழைந்தனர். அதாவது அறிமுகமான ஒரே மாதத்திற்குள் 16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஜியோ அடைந்தது.
10. சம்பளமும், அம்பானியின் பெரிய மனசும்.!
முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமான ரூ.15 கோடி ஆகும். உடனே வாயை பிளக்க வேண்டாம். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5% பங்களிப்பு ஆட்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி அம்பானி நிறுவனத்தின் மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலர்கள் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470