Home
News

பிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.!

ரிலையன்ஸ் கொண்டுவரும் இ-காமர்ஸ் பொறுத்தவரை சிறு வியாபாரிகளுக்கும், பெரும் வணிகம் செய்யும் அளவிற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

சமீபத்தில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம், அதன்படி ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹோலோகிராப்,விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

பிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.

குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியா களமிறங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி அவர்கள் தெரிவித்துள்ளார், பின்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மற்றும் வழக்கமாக இந்தியாவில் இருக்கும் விற்பனை முறைகளில் சில்லரை விற்பனை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் அம்பானி அவர்கள்.

முகேஷ் அம்பானி:

முகேஷ் அம்பானி:

மேலும் ரிலையன்ஸ் ரீடெயில் லிமிட்டெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்கள் இணைந்து இந்த இ-காமர்ஸ் திட்டத்தை செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

72 பில்லியன் டாலர்கள்:

72 பில்லியன் டாலர்கள்:

குறிப்பாக இந்த வால்மார்ட், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. தற்போது 32.7 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு,
2022-ம் ஆண்டில் 72 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பங்கள்;

தொழில்நுட்பங்கள்;

ஆன்லைனில் சற்று வித்தியசமாக ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஹோலோகிராப், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக இருக்கும் என்று முகேஷ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

 இ-காமர்ஸ்:

இ-காமர்ஸ்:

ரிலையன்ஸ் கொண்டுவரும் இ-காமர்ஸ் பொறுத்தவரை சிறு வியாபாரிகளுக்கும், பெரும் வணிகம் செய்யும் அளவிற்கு உதவும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-காமர்ஸ் துவங்கும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும்
விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிராட்பேண்ட்

பிராட்பேண்ட்

ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் பிராட்பேண்ட் மார்க்கெட்டில் நுழைய இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. மும்பை மற்றும் புனே
ஆகிய நகரங்களில் ஜியோஃபைபர் வசதியை தற்போது சோதனை முறையில் செய்து பார்த்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் ஜியோஃபைபர் தொடங்கும் நாள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஜியோஃபைபர்

ஜியோஃபைபர்

இதுவரை இந்தியாவில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே ஜியோஃபைபர் குறித்த சோதனையை முடித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஜியோஃபைபர் வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும் மும்பைஇ டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே இப்போதைக்கு இந்த சேவையை தொடரவுள்ளது. சில காலங்கள் கழித்து அடுத்தடுத்த பெரிய நகரங்களுக்கும் இந்த ஜியோஃபைபர் சேவை கிடைக்கும் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Takes On Amazon, Walmart in E-Commerce Slugfest: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X