Home
News

100% மக்கள்தொகையை கவர் செய்த Jio.. அம்பானி ஆடிய சூப்பர் 5G கேம்.. 45,000 கோடி ரூபாய் முதலீடு..

மக்களை கவர் செய்வதில் ஜியோவுக்கு (Jio) நிகர் வேறு எந்த நிறுவனமும் இருக்க முடியாது. இது உண்மை என்பதை ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 100% மக்கள் தொகையை ஜியோ அதன் 5ஜி வலைக்குள் சிக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, வங்காள மாநிலத்தில் 98.8% மக்கள்தொகையை தனது சேவையின் கீழ் கவர் செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த தகவல் வெளியான அதே நேரத்தில், ஜியோ நிறுவனம் கொல்கத்தா தொலைத்தொடர்பு வட்டத்தைப் பொறுத்தவரை, நிறுவனம் 100% மக்கள்தொகையை கவரேஜ் செய்துள்ளது.

100% மக்கள்தொகையை கவர் செய்த Jio.. அம்பானி ஆடிய சூப்பர் 5G கேம்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இந்த தகவலை உறுதிப்படுத்தினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதுவரை மேற்கு வங்கத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது என்றும் அம்பானி அறிவித்துள்ளார்.

ஜியோ 5ஜி கவரேஜ் இந்தியா (Jio 5G Coverage in India):

ஜியோ நிறுவனம் வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளை 5G மூலம் கவர் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் 5G SA பேண்ட்வித்தை வெளியிடுகிறது. இந்த 2023 இன் இறுதிக்குள் முழு 5ஜி வெளியீட்டை முடிக்க ரிலையன்ஸ் ஜியோ இலக்கு வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜியோ ஃபைபர் (JioFiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபரின் (Jio AirFiber) சேவையின் விரைவான வெளியீடு மூலம் வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் ஸ்மார்ட் ஹோமாக நிறுவனம் மாற்றம் செய்யவிருக்கிறது என்று முகேஷ் அம்பானி கூறினார். மாநிலத்தின் கிராமப்புறங்களில் வாழும் மக்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனம் கூடுதல் திட்டங்களை கொண்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) பெருமிதமாக கூறியது என்ன?

மேலும் முகேஷ் அம்பானி கூறுகையில், "5G இன் புரட்சிகர சக்தியை மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் நிறுவனம் கொண்டு செல்கிறது, குறிப்பாக கிராமப்புற வங்காளத்தை வளப்படுத்தவும் மாற்றவும் ஜியோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார். ஜியோ இதுவரை இந்தியாவில் உள்ள 262 நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதன் 5G FWA சேவையான ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் மாற்றம் திட்டத்தின் மூலம் வங்காளத்தில் வாழும் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை ஜியோ கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஜியோஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பரவலாக இருப்பதைப் பற்றி பேசுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மேலும் சில தகவல்களை பகிர்ந்தார்.

இந்தியாவில் எத்தனை நகரங்களை ஜியோ 5ஜி (Jio 5G) சேவைக்குள் கொண்டுவந்துள்ளது?

அதில், இந்த விரிவான கவரேஜ் மூலம், பெங்கால் தனது பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் நவீனமயமாக்க முயலும் என்று கூறினார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (Ai), கிளவுட் கம்ப்யூட்டிங் (cloud computing) மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களைப் (technology) பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.

ஜியோ இந்தியாவில் இதுவரை தொலைதூர மற்றும் நகர்ப்புற பகுதிகள் உட்பட 7,500-க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஜியோ தனது 5ஜி சேவையை ரூ. 239 விலை கொண்ட திட்டத்திற்கு மேல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Says Jio Has Covered 100% Population Under 5G Coverage In Kolkata Circle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X