நாடு முழுவதும் தகவல் தொடர்பு இணைப்பை மேம்படுத்த 5ஜி வெளியீட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: முகேஷ் அம்பானி

|

சமீபத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் 5ஜி வெளயீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சோனையை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் நாடு

இந்நிலையில் நாடு முழுவதும் தகவல் தொடர்பு இணைப்பை மேலும் மேம்படுத்த இந்தியா 5ஜி வெளியீட்டிற்கு முன்னுரிமைஅளிக்க வேண்டும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மொபைல் காங்கிரஸ் 2021 என்ற மாநாட்டில்கலந்து கொண்ட முகேஷ் அம்பானி, அடுத்த பத்தாண்டுகளுக்கான தகவல் தொடர்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதுபோது,

இந்தியாவிலேயே முதல் இடம்- ஜெய் பீம் திரைப்படத்திற்கு கூகுள் கொடுத்த மாபெரும் அங்கீகாரம்: அமோக புகழ்!இந்தியாவிலேயே முதல் இடம்- ஜெய் பீம் திரைப்படத்திற்கு கூகுள் கொடுத்த மாபெரும் அங்கீகாரம்: அமோக புகழ்!

5ஜி தொழில்நுட்பத்தை

5ஜி தொழில்நுட்பத்தை வெளியிடுவது இந்தியாவின் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், அதேசமயம் 5ஜி
புரட்சிக்கு தொழில்துறை தயாராகி வரும் வேளையில் 2ஜி நெட்வொர்க்குகளில் இருந்து 4ஜி க்கு விரைவாக இந்தியர்கள்இடம்பெயர வேண்டியதன் முக்கயத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா இல்ல 41% தள்ளுபடி: ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்- இனி நம்ம வீடு வேற லெவல்: அமேசான் அதிரடி சலுகை!சும்மா இல்ல 41% தள்ளுபடி: ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்- இனி நம்ம வீடு வேற லெவல்: அமேசான் அதிரடி சலுகை!

இந்தியா 2ஜி சேவையில் இருந்து 4ஜி-க்கும் பின்ன

குறிப்பாக இந்தியா 2ஜி சேவையில் இருந்து 4ஜி-க்கும் பின்னர் அதிலிருந்து 5ஜி-க்கும் இடம்பெயர்வதை விரைவில் முடிக்கவேண்டும் என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். மேலும் ஜியோ பொருத்தவரை 4ஜி மற்றும் 5ஜி செயல்படுத்தல் மற்றும்பிராட்பேண்ட் விரிவாக்கம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

தற்கொலை மெஷின்: இதில் படுத்தால் ஒரே நிமிடம்தான்., வலியில்லா மரணம் உறுதி- சட்டப்பூர்வ அனுமதி அளித்த நாடு!தற்கொலை மெஷின்: இதில் படுத்தால் ஒரே நிமிடம்தான்., வலியில்லா மரணம் உறுதி- சட்டப்பூர்வ அனுமதி அளித்த நாடு!

ஜி பொருத்தவரையில் முழுமையாக

அதேபோல் 5ஜி பொருத்தவரையில் முழுமையாக கிளவுட் முறையிலும் மற்றும் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கப்படும் வகையிலும் 100 சதவிகித உள்நாட்டு தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம். ஜியோவின் நெட்வொர்க்கை விரைவாகவும் தடையின்றியும் 4ஜியில் இருந்து 5ஜி-க்கு மேம்படுத்தலாம். பின்பு இந்திய பயனர்களை கருத்தில் கொண்டு 5ஜி சேவைகள், சாதனங்கள் அணுககூடிய வகையில் மலிவான கட்டணங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பாப் அப் ரியர் கேமரா அம்சத்துடன் வெளிவரும் Oppo ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு கேமராவை பார்த்திருக்கமாட்டீங்க..பாப் அப் ரியர் கேமரா அம்சத்துடன் வெளிவரும் Oppo ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு கேமராவை பார்த்திருக்கமாட்டீங்க..

லும் சில வாரங்களுக்கு முன்பு

மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, ஜியோ நிறுவனம் டேப்லெட் மற்றும் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. GizChina அறிக்கையின்படி, வரும் 2022-ம் ஆண்டிற்குள் ஜியோ டிவி, ஜியோ டேப்டெல் மாடல்கள் வெளியிடப்பட வாய்ப்புஉள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஜியோ லேப்டாப் மாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது ஜியோ லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

நினைத்துக்கூட பார்க்க முடியாது- எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வேற லெவல் சூரிய கிரகணம் புகைப்படம்!நினைத்துக்கூட பார்க்க முடியாது- எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வேற லெவல் சூரிய கிரகணம் புகைப்படம்!

 மற்றும் கூகுள் நிறுவனங்கள்

சமீபத்தில் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் பட்ஜெட் விலை ஜியோபோன் நெக்ஸ்ட் இப்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளம் வழியாக விற்பனைக்கு வருகிறது. முன்னதாக, வாடிக்கையாளர்கள் ஒரு விருப்பத்தின் மூலம் மட்டுமே ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இப்போது, ​​ஆர்வமுள்ள வாங்குவோர் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்வதன் மூலம் பதிவு செய்யாமல் வாங்கலாம். இணையதளத்தில், JioPhone Next இன் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்கள் கிடைக்கின்றன.

வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் செய்வது? WhatsAppன் அடுத்த மிரட்டல் அம்சங்கள் என்ன தெரியுமா?வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் செய்வது? WhatsAppன் அடுத்த மிரட்டல் அம்சங்கள் என்ன தெரியுமா?

யோ டிவி மற்றும் ஜியோ டேப்லெட்டின்

மேலும் ஜியோ டிவி மற்றும் ஜியோ டேப்லெட்டின் முக்கிய விவரக்குறிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற ஆண்ட்ராய்டு டேப்லெட்டைப் போலவே ஜியோ டேப்லெட் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் ஜியோ டேப்லெட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ டேப்லெட்ஆனது சாம்சங், மோட்டோ, லெனோவா போன்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களுடன் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

சபாஷ்., சரியான வாய்ப்பு: ரூ.13,000 தள்ளுபடி சார்- ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ சாதனத்தை உடனே சொந்தமாக்குங்கள்!சபாஷ்., சரியான வாய்ப்பு: ரூ.13,000 தள்ளுபடி சார்- ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ சாதனத்தை உடனே சொந்தமாக்குங்கள்!

ஜியோ டேப்லெட் ஜியோபோன் நெக்ஸ்ட்

புதிய ஜியோ டேப்லெட் ஜியோபோன் நெக்ஸ்ட் போன்ற பிரகதி ஓஎஸ் அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிவி ஆனது OTT ஆப்ஸ்களை ஆதரிக்கும் என்றும், பின்பு ஜியோவின் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கும்
செட்-டாப் பாக்ஸ் பேக்கேஜுடன் வரலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.அதேபோல் இந்தியாவில் ஜியோவின் 5ஜி சேவைஅதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani says 5G launch should be given priority: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X