அடேங்கப்பா...உயர்ந்தது அம்பானியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார் மேலும் இந்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் 9-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ரூ.1.20லட்சம் கோடி

ரூ.1.20லட்சம் கோடி

இந்த நிலையில் நடப்பு ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1700கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.20லட்சம் கோடி) உயர்ந்து இருப்பது புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு 6,100 கோடி டாலரை எட்டி இருக்கிறது.

ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ்

மேலும் புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவின் நிகர சொத்து மதிப்பு1,130கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. அடுத்து ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 1,320கோடி டால் உயர்ந்துள்ளது.

ஆஹா கெத்து., 1 நிமிடத்திற்கு 95 பேர் இந்த உணவை தான் ஆர்டர் செய்கிறார்கள்: ஸ்விகி அறிக்கைஆஹா கெத்து., 1 நிமிடத்திற்கு 95 பேர் இந்த உணவை தான் ஆர்டர் செய்கிறார்கள்: ஸ்விகி அறிக்கை

 40 சதவீதம் உயர்ந்து

40 சதவீதம் உயர்ந்து

குறிப்பாக ஆர்.ஐ.எல். பங்கின் விலை 40 சதவீதம் உயர்ந்து இருப்பதே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எகிறியதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் தெர்டர் ஏற்றம் காரணமாக ஆர்.ஐ.எஸ் பங்கு பற்றிய மதிப்பீடுகளையும் தரகு
நிறுவனங்கள் உயர்த்த தொடங்கி உள்ளன.இந்த வகையில் சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் அண்மையில் இப்பங்கிற் கான எதிர்கால இலக்கை ரூ.2இ010-ஆக அதிகரித்தது. துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கட்டண விகிதங்களை உயர்த்தி இருப்பதே இதன் பின்னணியாகும்.

மும்பை பங்குச்சந்தை

மேலும் மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது ஆர்.ஐ.எஸ் நிறுவனப் பங்கு ரூ.1,570.90-க்கு கைமாறியது. அதன்பின்பு வர்த்தகத்தின் இடையே அதிபட்சமாக ரூ.1,572.15-க்கும் குறைந்தபட்சமாக ரூ.1,542,75-க்கும் சென்றது. இறுதியாக ரூ.1,545.95-ல் நிலை கொண்டது. ஆனால் கடந்த திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது 1.59 சதவீத சரிவாகும்.

முதலீட்டை குவித்து வருகிறார்கள்

இந்த ஆண்டில், அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணம், அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை,40 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது ஆகும். முதலீட்டாளர்களும் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீட்டை குவித்து வருகிறார்கள். புதிய வணிகங்களான தொலைதொடர்பு துறை, சில்லரை விற்பனை என, அனைத்தையும் அவர்கள் ஆதரித்து வருகிறார்கள். . மேலும் முகேஷ் அம்பானியின் அடுத்த முயற்சியான மின்னணு வர்த்தகத்துக்கும் ஆதரவை வழங்க கூடும் என்கிறார்கள், சந்தை நிபுணர்கள்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani saw his wealth surge $18 billion this year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X