ஸ்பீடு அதான் மேட்டரே, ஜியோவின் அடுத்த அதிரடி.! வாடிக்கையாளர்கள் புகுந்து விளையாடலாம்!

|

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.5000-க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 முதல் 3500 வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

மத்தியில் அதிக எதிர்பார்ப்பை

இந்நிலையில் 5ஜி கட்டமைப்புப் பணிக்காக உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவமான குவால்காம் உடன் ஜியோ கைகோர்க்க உள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும்

நாட்டின் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மெய்நிகராகப்பட்ட ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவையை தொடங்க ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

4ஜிபி ரேமோடு மிகக் குறைந்த விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 10!

 1 Gbps மைல்கல்லை எட்டியுள்ளதாக

குறிப்பாக குவால்காம் 5ஜி RAN இயங்குதளங்களைப் பயன்படுத்தும் ரிலையன்ஸ் ஜியோ 5GNR மென்பொருளில் 1 Gbps மைல்கல்லை எட்டியுள்ளதாக ஜியோ மற்றும் குவால்காம் ஒன்றாக அறிவித்துள்ளன.

5ஜி உச்சிமாநாட்டின்போது

மேலும் குவால்காம் 5ஜி உச்சிமாநாட்டின்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவர் மேத்யூ ஓம்மன் கூறுகையில், புதிய தலைமுறைக்கான கிளவுட் நேட்டிவ் 5ஜி RAN தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் குவால்காம் டெக்னாலஜிஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழச்சியடைகிறோம்.

 உள்ளூர் உற்பத்திக்கான

ஜியோ இயங்குதளங்கள் மற்றும் ஸ்கேல் இணைந்து குவால்காம் டெக்னாலஜிஸுடன் பாதுகாப்பான RAN தீர்வுகளின் மேம்பாடு உள்ளூர் உற்பத்திக்கான சிறந்த கலவையை வழங்குகிறது என்று மேத்யூ ஓம்மன் கூறியுள்ளார்.

ந்தியாவின் தலைவர் ராஜன்

பின்பு குவால்காம் இந்தியாவின் தலைவர் ராஜன் வாகாடியா கூறுகையில், ரிலையன்ஸ் ஜியோவுடனான எங்கள் நீண்டகால உறவில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதில் நாங்கள் மகிழ்சியடைகிறோம். 5ஜி வசதிக்கான எங்கள் மேம்பட்ட பார்வையை வளர்த்து இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிக்கிறோம்.

அதன் பயனர்களுக்கு குறைந்த

அதன்பின்பு ஜியோ அதன் பயனர்களுக்கு குறைந்த செலவில் மற்றும் அதிகமான 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கான மேம்பட்ட 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வெளியிடுவதற்காள பயணத்தில் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mukesh Ambani’s Jio teams up with Qualcomm to ready 5G solutions for India And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X