அறிமுகமானது ஜியோ பேங்க்: எவ்வளவு லோன் கிடைக்கும்.? கிரெடிட், டெபிட் கார்டுகள் கிடைக்குமா.?

இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவையின் பிரதான நோக்கம் நிதி சேர்க்கை (financial inclusion) ஆகும்.

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payment Bank) ஆனது நேற்று முதல் (செவ்வாய்) தனது சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இது ஏர்டெல், இந்தியா போஸ்ட், ஃபினோ பேடெக் மற்றும் பேடிம் போன்ற பிற கட்டண வங்கிகளுடன் நேரடியாக போட்டியிடும் வண்ணம் சந்தையில் நுழைந்துள்ளது. இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவையின் பிரதான நோக்கம் நிதி சேர்க்கை (financial inclusion) ஆகும்.

01. லோன் கிடைக்குமா.?

01. லோன் கிடைக்குமா.?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (ஆர்பிஐ) கூற்றுப்படி, இந்த ஜியோ பேமன்ட்ஸ் பேங்க் சேவையானது அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்காது. சேமிப்பு கணக்குகள் போன்ற வரையறுக்கப்பட்ட வங்கி சேவைகளை மட்டுமே வழங்கும். இது தவிர முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் பற்றி நீங்கள் காட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களும் உள்ளது.

02. கிரெடிட் கார்டுகள் கிடைக்குமா.?

02. கிரெடிட் கார்டுகள் கிடைக்குமா.?

ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியானது, ரூ.1 லட்சத்திற்கு மேலான டெபாசிட்களை ஏற்காது என்பதும், முன்னர் குறிப்பிட்டபடி ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது எந்த விதமான கிரெடிட் கார்டுகளை வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், டெபிட் கார்டுகள் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஆதார் அடையாளம் வேண்டுமா.?

03. ஆதார் அடையாளம் வேண்டுமா.?

மிக முக்கியமான விஷயமாக, ஒரு ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறக்க, குறிப்பிட்ட வாடிக்கையாளரின் ஆதார் அட்டை வேண்டும். அதாவது அக்கவுண்ட் திறக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்களின் 12-இலக்க ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

04. அம்பானிக்கு எவ்வளவு பங்கு.?

04. அம்பானிக்கு எவ்வளவு பங்கு.?

இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி, இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ. (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமாகும். பங்களிப்பை பொறுத்தவரை ஜியோவிற்கு 70 சதவீத பங்குகளும், மீதமுள்ள 30 சதவீத பங்கு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் (எஸ்.பி.ஐ.) உள்ளது.

05. அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதா.?

05. அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதா.?

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (Banking Regulation Act), 1949, பிரிவு 22 (1)-ன் கீழ், ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்த வங்கி சேவைக்கான ஒப்புதலை கடந்த ஆகஸ்ட் 19, 2015 அன்று, ஆர்பிஐ-யிடம் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. இதேபோன்ற ஒப்புதலை பெற்ற இதர பெரு நிறுவனங்களை பொறுத்தவரை, ஆதித்ய பிர்லா நுவோ, பார்தி ஏர்டெல், டிபார்ட்மென்ட் ஆப் போஸ்ட், டெக் மஹிந்த்ரா மற்றும் வோடபோன் ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani's Jio Payment Bank: 5 Facts To Know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X