அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!

|

உலகளவில் மிகப்பெரிய வணிகர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்ந்து வருகிறார். அம்பானி இந்தியர்கள் மீது வைத்திருக்கும் கவனத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்தில் வெளிப்படுத்தினார். மலிவு விலையில் இணைய சேவை வழங்கியதோடு அனைத்து தரப்பினரும் 4ஜி, 5ஜி இணைய வேகத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி

இந்தியாவின் பணக்காரர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம் உலகின் மிக மதிப்புமிக்க தனியார் குடியிருப்பு சொத்துகளில் ஒன்று. மும்பையின் அடையாளங்களில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.

மும்பையில் உள்ள அன்டிலியா பங்களா

மும்பையில் உள்ள அன்டிலியா பங்களா

மும்பையில் உள்ள அன்டிலியா பங்களாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி மற்றும் மூன்று குழந்தைகள் ஆனந்த் ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோருடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இஷா அவரது கணவர் ஆனந்த் பிரமளுடன் வொர்லி பங்களாவில் வசித்து வருகிறார்.

அன்டிலியா பங்களா 27 தளங்கள்

அன்டிலியா பங்களா விவரங்களை விக்கிபீடியாவும் வெளியிட்டுள்ளது. அன்டிலியா பங்களா 27 தளங்களை கொண்டுள்ளது. இதன் மதிப்பு 2.2 பில்லியன் டாலர் மதிப்புடையது அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15,000 கோடி ஆகும். இந்த பங்களா பிரிட்டிஷ் ராயல் குடும்பத்துக்கு சொந்தான லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக அதாவது உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த பங்களாவாக கருதப்படுகிறது.

அன்டிலியா தீவின் பெயர்

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு அருகிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலின் அருகில் அமைந்துள்ளது அன்டிலியா தீவு. இதன் பெயரே இந்த பங்களாவுக்கு சூட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 27 தளங்கள்

அன்டிலியா பங்களாவில் மொத்தம் 27 தளங்கள் உள்ளது என்றாலும் ஒவ்வொரு கூரையின் உயரமும் கூடுதலாக உள்ளது. இதன்காரணமாக அன்டிலியா பங்களாவில் 60 மாடி கட்டடம் போல் மிக உயரமாக காட்சியளிக்கிறது.

தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா பங்களா. இதில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம், 168 கார்கள் கேரேஜ், பால்ரூம், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் இருக்கிறது.

மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம்

தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா பங்களா. இதில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கு தளம், 168 கார்கள் கேரேஜ், பால்ரூம், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் இருக்கிறது.

பிரத்யேக பனி அறை

அதோடு அன்டிலியா பங்களாவில் மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, சுகாதார மையம் மற்றும் ஒரு கோயில் உள்ளது. மேலும் இதில் ஒரு பனி அறை இருக்கிறது. இந்த அறையின் சுவர்களில் இருந்து உண்மையான பணி விழும்.

600 ஊழியர்கள் தங்குவதற்கான இடவசதி

24x7 என்ற அடிப்படையில் பணியாற்றும் 600 ஊழியர்கள் தங்குவதற்கான இடவசதி இருக்கிறது. சூரியன் மற்றும் தாமரை வடிவமைப்புகள் போன்று இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் இந்த பங்களா 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தை தாங்கும்.

24 மணிநேரமும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்

அன்டிலியா பங்களா கட்டுமான பணிகள் 2006-ல் தொடங்கப்பட்டன. 2012-ல் முகேஷ் அம்பானி குடும்பத்தாரோடு இதில் குடியேறினார். இதில் 24 மணிநேரமும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள், பணியாளர்கள் ஷிஃப்ட் முறையில் இருக்கின்றனர்.

விற்பனை செய்ய முடிவு

அனாதை இல்லம் வைத்திருக்கும் நிலத்தில் அன்டிலியா இல்லம் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அனாதை குழந்தைகள் நலனுக்காக வக்பு வாரியத்துக்கு சொந்தமான இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

தடையில்லா சான்று

பல சட்ட சிக்கலுக்கு நடுவே முகேஷ் அம்பானி ரூ.1.6 கோடி தொகை செலுத்தி தடையில்லா (நோ அப்ஜெக்ஷன்) சான்று பெற்றார். அதை தொடர்ந்து நிலத்தின் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. மேலும் மும்பை கட்டிடங்களில் ஹெலிபேடுகளை அமைக்க இந்திய கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில்

அதேபோல் ஹெலிகாப்டர்கள் சத்தம் உள்ளூர் இரைச்சல் சட்டங்களை மீறியதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அனுமதி பெறப்பட்டது. முகேஷ் அம்பானி இந்த பங்களாவில் குடியேறியவுடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தார்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani's Antilia House: Rs.15,000 Crore Valued Bungalow Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X