Home
News

அம்பானி அடிச்ச சிக்ஸர்.. ரூ.370 செலவுல 84 நாள் வேலிடிட்டி.. Jio யூசர்களை கையில புடிக்க முடியல!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வெறும் ரூ.369 க்கு 84 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றி விரிவாக பேசுவதற்கு முன், இந்த திட்டம் யாருக்கானது என்பதை பற்றிப் பேசலாம். உங்களுக்குத் தெரியாவிட்டால், ஜியோவில் இரண்டு வகை ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன - ஒன்று வழக்கமான திட்டங்கள் மற்றொன்று ஜியோபோன் அல்லது ஜியோபாரத் திட்டங்கள்.

நாம் பேசும் இந்த ரூ.369 திட்டம் ஜியோபாரத் பிரிவின் கீழ் உள்ளது. நிச்சயமாக, இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கான திட்டம் ஆகும். ஜியோபோன் மற்றும் ஜியோபாரத் ஆகியவை ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை கீபேட் 4ஜி போன்கள் ஆகும். இந்த போன்கள் ஜியோ-சிம் கொண்டு லாக் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஜியோ சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ரூ.370 செலவுல 84 நாள் வேலிடிட்டி.. Jio யூசர்களை கையில புடிக்க முடியல!

இப்படி செய்வதன் மூலம், அதாவது ஜியோ-ஒன்லி மொபைல் போன்களின் மூலம் ஜியோ நிறுவனத்தால் புதிய பயனர்களை சேர்க்க முடியும். இதன் விளைவாக இந்த ​​தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அவ்வளவு அதிகமாக உயராது என்றாலும் ஜியோ பயனர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.369 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.369 திட்டம் 84 நாட்களுக்கு ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் ஆனால் 28 நாட்களுக்கு 300 இலவச எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கும். டேட்டா நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 0.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும். அதாவது 84 நாட்களுக்கு மொத்தம் 42ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.4.39 ஆகும். இது மிகவும் மலிவான திட்டம் ஆகும், குறிப்பாக 4ஜி நெட்வொர்க் சேவை போதும் என்கிற பீச்சர் போன் பயனர்களுக்கு ஜாக்பாட் ரீசார்ஜ் ஆகும். கீபேட் போன்கள் என்பதால் இவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் அளவிற்கு அதிக டேட்டா தேவையில்லை. ஆக இதன்கீழ் கிடைக்கும் 0.5ஜிபி டேட்டா பலருக்கும் போதுமானதாக இருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி நிச்சயமாக, ஜியோபாரத் திட்டங்கள் ஆனது புதிய வாடிக்கையாளரைச் சேர்ப்பதில் ஜியோ நிறுவனத்திற்கு உதவுகிறது, அவர்கள் ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்தப்பட்டு, பின்னர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் விளைவாகவே நாட்டில் ஜியோபோன் அல்லது ஜியோபாரத் போன்களை பயன்படுத்தும் பல மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.2025-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2025 திட்டத்தின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மொத்தம் 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, அதாவது பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும். இதோடு பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெறுவார்கள்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, புதிய கனெக்ஷன்களுக்கு 2 மாதங்களுக்கு ஜியோஹோம் சோதனை இலவசமாக கிடைக்கும். இதோடு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். மேலும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜில் 50ஜிபி இலவசமாக கிடைக்கும்.

கடைசியாக ரூ.2025-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) திட்டத்தை இலவசமாக பெறுவார்கள். இந்த் சாந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும். மேலும் இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஓடிடி சலுகைகள், போதுமான அளவு டேட்டா மற்றும் 200 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் - இந்த திட்டம் இன்னும் மதிப்புக்குரியதாக உள்ளத. நிச்சயமாக, ஜியோ நிறுவனத்தின் கேள் இன்னும் மலிவான திட்டங்கள் உள்ளன, ஆனால் இந்த திட்டத்தில் ஒருவர் விரும்பும் அனைத்தும் உள்ளன. ஜியோ ரூ.2025 திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மற்றும் மைஜியோ ஆப்பில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Reliance Jio Rs 369 Prepaid Plan With 84 Days Validity For JioBharat Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X