Home
News

இனி ஏழைகள் கூட AC வாங்கலாம்.. அம்பானியின் சூப்பர் பிளான்.. குறைந்த விலையில் ஃபிரிட்ஜ், TV, வாஷிங் மெஷின்..

அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் கால்பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரம் இதோ.

இந்தியாவின் முதல் பணக்காரர் என்று அழைக்கப்படும் முகேஷ் அமபனியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இப்போது வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, ஏசி (AC), பிரிட்ஜ் (ஃபிரிட்ஜ்), வாஷிங் மெஷின் (Washing machine), டிவி (TV), மிக்சி (Mixie), மற்றும் எல்இடி பல்ப் (LED bulb) போன்ற சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இனி ஏழைகள் கூட AC வாங்கலாம்.. அம்பானியின் சூப்பர் பிளான்..

இனி ஏழைகள் கூட AC வாங்கலாம்.. குறைந்த விலையில் ஃபிரிட்ஜ், TV, வாஷிங் மெஷின், LED பல்ப்கள்:
போதும்..போதும்.. என்ன லிஸ்ட் ரொம்ப பெரிசா போய்ட்டு இருக்கே என்று சில நினைக்கலாம். ஆனால், இது வெறும் துவக்க பட்டியல் தான் என்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழுமம். ஆரம்ப கட்டமாக மட்டுமே இத்தனை சாதனங்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஓனர் அம்பானி திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, மக்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப இன்னும் பல புதிய சாதனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளது.

இந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அதற்கு சொந்தமான வைஸர் (Wyzr) என்ற பிராண்டின் கீழ் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரானிக்ஸ் சாதன பிராண்ட் தான் இந்த வைஸர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராண்டின் கீழ் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஏர்-கூலர் சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய துவங்கிவிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆம் மக்களே, வைஸர் (Wyzr) என்ற பிராண்டின் கீழ் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரானிக் சாதனமாக இப்போது இந்தியாவில் ஏர் கூலர் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. WYZR 22 L Room/Personal Air Cooler என்ற மாடல் இப்போது 22 லிட்டர் கொள்ளளவுடன் வெறும் ரூ.7,999 என்ற ஆரம்ப விலை முதல் வாங்க கிடைக்கிறது. எலக்ட்ரானிக் சந்தையில் இந்த கொள்ளளவு கொண்ட ஏர்-கூலர் விலை குறைவாக பார்க்கப்படுகிறது.

இனி ஏழைகள் கூட AC வாங்கலாம்.. அம்பானியின் சூப்பர் பிளான்..

ரிலையன்ஸ் இப்போது விற்பனை செய்யும் வைசர் ஏர் கூலர்கள் (Reliance Now Selling Wyzr Air Coolers):
வெயில் காலத்தில், மக்கள் அனல் காற்றிலும் வெப்பத்திலும் சிக்கி தவிப்பதை குறைக்க உதவும் வகையில், குறைந்த விலை ஏர் கூலர் (Air cooler) சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க, ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது உள்நாட்டு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் நுழைவதற்கான ஒப்புதலை கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம், ஒனிடாவின் (Onida) தாய் நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ் (Dixon Technologies) மற்றும் மிர்க் எலக்ட்ரானிக்ஸ் (Mirc Electronics), உள்நாட்டு நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் அதன் புதிய பிராண்டான வைஸரை (Wyzr) விரிவுபடுத்த அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், இந்தியா முழுக்க மேட் இன் இந்தியா தயாரிப்புகள் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் (Samsung), எல்ஜி (LG) போன்ற உலக பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வரும் சந்தையில் அம்பானி குறைந்த விலை சாதனங்களை அறிமுகம் செய்து வெற்றி பெற திட்டமிடுகிறார் என்பது தெளிவாகிறது. வதந்திகள் உண்மையானால், இனி ஏழைகள் கூட AC வாங்கும் வகையில் மலிவான ஏர் கன்டிஷனர்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் மலிவு விலையில் லேப்டாப், 4ஜி பியூச்சர் போன்களை ரிலையன்ஸ் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Reliance Going To Launch Its Own AC, TV, Fridge, Washing Machine, LED Bulbs In India Under Wyzr Brand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X