Home
News

முகேஷ் அம்பானி துவங்கும் அடுத்த தொழில்.. ரூ.12.5 லட்சம் கோடி முதலீடு.. என்ன பிஸ்னஸ் தெரியுமா?

இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) விட்டுவைக்காதே தொழில்லே இல்லை என்று சில கூறுவர். ஆனால், அவர் விட்டுவைத்த தொழில் ஒன்றை ரூ. 1252740 கோடி முதலீட்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது என்ன தொழில் என்பதை பார்க்கலாம்.

உலக கோடீஸ்வரர் பட்டியலில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் பெருமைமிகு இந்தியராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டின் கீழ், மொத்தம் 250-திற்கும் மேற்பட்ட தொழில்கள் இயங்கி வருகின்றன. இதில் சில தொழில்களில் உலக நாடுகளின் ஒத்துழைப்பும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபர் சாம்ராஜ்யமாக முகேஷ் அம்பானியின் யுக்திகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

முகேஷ் அம்பானி துவங்கும் அடுத்த தொழில்.. ரூ.12.5 லட்சம் கோடி முதலீடு..

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புது தொழிலில் முதலீடு (Mukesh Ambani's Reliance Industries invests in new business):

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக அம்பானி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், அவரது வாரிசான ஆகாஷ் (Akash), ஆனந்த் (Anand) மற்றும் இஷா (Isha) அம்பானி ஆகியவர்கள் குழுவின் பல்வேறு துணை நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இன்றைய நிகழ்நேர தகவலின் படி, முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு ரூ.920340 கோடி வரை செல்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சொத்து மதிப்புடன் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்து வருகிறது. டெலிகாம், சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது தொழிலை அம்பானி விரிவுபடுத்தி வருகிறார்.

இப்போது, ​​67 வயதான அவர் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை புதிய தொழில் ஒப்பந்தமிட இருக்கிறார். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ. 1252740 கோடியை தாண்டுகிறது. இந்த பெருந்தொகையை முகேஷ் அம்பானி டயாக்னோஸ்டிக் ஹெல்த்கேர் செக்மென்ட் (diagnostic healthcare segment) என்ற நோயறிதல் ஹெல்த்கேர் பிரிவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி துவங்கும் அடுத்த தொழில்.. ரூ.12.5 லட்சம் கோடி முதலீடு..

முகேஷ் அம்பானியின் அடுத்த புது பிஸ்னஸ் என்ன தெரியுமா?

மற்றொரு சமீபத்திய அறிக்கையின் படி, ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் ரூ. 1000 முதல் ரூ. 3000 கோடியுடன் நோயறிதல் கண்டறியும் சேவை நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ​​ரிலையன்ஸ் ரீடெய்ல் அதன் போர்ட்ஃபோலியோவில் ஆன்லைன் மருந்தகமான நெட்மெட்ஸைக் (Netmeds) சேவையை வழங்கி வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், நெட்மெட்ஸின் பெரும்பான்மையான பங்குகளை ரூ. 620 கோடிக்கு ரிலையன்ஸ் குழுமம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்மெட்ஸ், தைரோகேர் (Thyrocare), ஹெல்த்ஷியன்ஸ் (Healthians) மற்றும் பல நிறுவனங்களுடன் அதன் டை-அப் மூலம் நோயியல் சேவைகளை இந்த நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இது அனைத்தும் ஆன்லைன் சேவைகளாக அறிமுகம் செய்யப்பட்டது.

நெட்மெட்ஸ் அதன் முதல் ஆஃப்லைன் ஸ்டோரை ஜனவரி 2023 இல் திறந்தது, இப்போது 1000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இதற்கு மத்தியில், ​​ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தனது சொந்த நோயறிதல் நிறுவனத்தை நாடு முழுவதிலும் உள்ள ஒரு பெரிய அளவிலான உடல் ஆய்வக வலையமைப்பைக் கொண்டிருப்பதாக விரும்புகிறது. இதன் மூலம் பல கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழைகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Planning To Invest Rs 1252740 Crore Into Diagnostic Healthcare Segment Sector
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X