அமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.!

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைபேசி, இண்டர்நெட் வெற்றியை தொடர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தையும் த

|

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.

அமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.!

ரிலையன்ஸ் நிறுவனம் தொலைபேசி, இண்டர்நெட் வெற்றியை தொடர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தையும் துவங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கும் அனைத்து தொழில்களும் வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஆன்லைன் நிறுவனம் துவங்கியுள்ளதால், முன்னணில் இருக்கின்ற அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இதில் அடி விழும் என்று கூறப்படுகின்றது.

 ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து:

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து:

ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர்.

ஆன்லைன் வலைதளம்:

ஆன்லைன் வலைதளம்:

ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கி, குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.

 28 கோடி வாடிக்கையாளர்கள்:

28 கோடி வாடிக்கையாளர்கள்:

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை இதுவரை சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் ரீடெயில் முணையங்கள் இந்தியா முழுக்க சுமார் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன.

ஆன்லைன் வர்த்தகம்:

ஆன்லைன் வர்த்தகம்:

புதிய ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரிகளை சேர்க்க ஜியோவின் செயலிகள் மற்றும் சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று ரிலையன்ஸ் ரீடெயில் மூத்த அதிகாரியான வி. சுப்ரமணியம் தெரிவித்தார்.

மத்திய அரசு தடை:

மத்திய அரசு தடை:

வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பாதிப்பு:

பாதிப்பு:

இந்த விதிமுறைகள் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட் கைப்பற்றியிருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவன வியாபாரங்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம்:

ரிலையன்ஸ் நிறுவனம்:

ரிலையன்ஸ் ஆன்லைன் நிறுவனத்தை துவங்கினால் கட்டாயம் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Outlines Plan to Take on Amazon in India : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X