Home
News

கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி.!

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி உலக டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை இந்தியாவின் முககேஷ் அம்பானி அவர்கள் முந்தி இருக்கிறார். குறிப்பாக இந்த லிஸ்டில் அம்பானி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

 கடந்த மார்ச் மாதம் முதல் முகேஷ் அம்பானியின்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த வருட்ம் முகேஷ் அம்பானிக்கு மிகவும் பொன்னான காலம் என்றுதான் கூறவேண்டும்.அதாவது கடந்த மார்ச் மாதம் முதல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மே மாதம் துவகத்தில் மொத்தமாக

மேலும் கடந்த மே மாதம் துவகத்தில் மொத்தமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாகஅறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை அதிகளவில் ஈர்த்துதான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

வாரங்களுக்கு முன்பு முகேஷ்

சரியாக மூன்று வாரங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியிலில் இடம் பிடித்தார், 65-வது பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் டாப் 10-இடத்திற்கு வந்தார். அதோடு நிறக்காமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டேசென்றதுää அன்மையில், அவர் இன்னொரு கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்டை முந்தினார்.

டாப் கோடீஸ்வரர்கள்

தற்சமயம் உலகின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை இந்தியாவின் முகேஷ் அம்பானி முந்தி இருக்கிறார். மேலும் இந்த லிஸ்டில் முகேஷ் அம்பானி 6-வது இடத்தை பிடித்திருக்கிறார். குறிப்பாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அவரின் சொத்து மதிப்பில்

மேலும் அம்பானியின் அவரின் சொத்து மதிப்பில் 2.17 பில்லியன் டாலர் உயர்ந்த நிலையில் அவர் 6ம் இடத்தை பிடித்துள்ளார். விரைவில் இவர் டாப் 5 இடத்தை பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 பணக்காரராக முதல் இடத்தில் ஜெப் பெசொஸ்

இப்போது உலகின் டாப் பணக்காரராக முதல் இடத்தில் ஜெப் பெசொஸ், இரண்டாம் இடத்தில் பில் கேட்ஸ், மூன்றாம் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் உள்ளனர். அடுத்து ஆறாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார்.

களை ஈட்டி

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொடர்ந்து பல்வேறு உலக நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறது. அதிலும் அமெரிக்காவில் பல கோடிகளை ஈட்டி வரும் நிறுவனங்கள் ஜியோ மீது முதலீடுகளை குவிக்க துவங்கியுள்ளது. அதாவது ஜியோவின் 25.24சதவிகிதம் பங்குகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் ரூ. 118,318.45 முதலீடுகளை ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani now Richer Than Elon Musk, Google Founders: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X