சோனமுத்தா போச்சா? உலக பணக்கார பட்டியலில் பின்தங்கிய முகேஷ் அம்பானி.. Ambani-யை ஓவர்டேக் செய்தது யார் தெரியுமா?
உலக பணக்கார பட்டியலில் இதுவரை 11வது இடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இப்போது திடீரென சரிவை கண்டு, உலக பணக்கார பட்டியலில் ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கிறார். ஒரே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிக சொத்தை குவித்து, 11வது இடத்திற்கு முன்னேறியவர் யார்? என்ன காரணத்தினால் முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் இருந்து ஒரு இடம் பின்னோக்கி நகர்த்தப்பட்டார்? உலக பணக்காரர் பட்டியலில் யார் முதல் 10 இடங்களில் உள்ளனர் என்பதையும் பார்க்கலாம்.
இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகவும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் (world's richest people in 2024 list) இருந்து ஒரு இடத்தை இழந்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான அம்பானி, முன்பு 11வது இடத்தில் இருந்து வந்தார். தற்போதைய தகவலின் படி, இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி, உலக பணக்கார ரேங்கிங் பட்டியலில் 12வது இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

சோனமுத்தா போச்சா? உலக பணக்கார பட்டியலில் பின்தங்கிய முகேஷ் அம்பானி:
அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) நிறுவனர் மற்றும் சிஇஓ ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), அம்பானியை முந்தியுள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அம்பானி மற்றும் ஹுவாங் இருவருக்கும் 113 பில்லியன் டாலர் சொத்து இருந்துள்ளது. இருப்பினும், ஹுவாங் இன் டெசிமல் புள்ளிகளால், தற்போது 11வது இடத்திற்கு நகர்ந்திருக்கிறார். இதனால், முகேஷ் அம்பானி 12வது இடத்திற்கு நகர்ந்தப்பட்டிருக்கிறார்.
என்விடியாவின் பங்குகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன, இதனால் ஹுவாங் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வருவாய் ஈட்டும் பில்லியனராக ஆனார். அவரது சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டில் 69.3 பில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும், ஹுவாங்கின் சொத்து மதிப்பு 4.73 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு 12.1 மில்லியன் டாலர்கள் அதிகரித்தது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் மார்க் ஸுக்கர்பெர்க் அடுத்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 59.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் நான்காவது இடத்தைப் பிடித்து, மொத்த சொத்து மதிப்பு 188 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளார். இருப்பினும், வெள்ளிக்கிழமை அவரது சொத்து மதிப்பு 1.38 பில்லியன் டாலர்கள் குறைந்துவிட்டது.
உலகின் மிகப் பெரிய 10 பணக்காரர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இதோ:
- எலான் மஸ்க் $244 பில்லியன்
- பெர்னார்ட் ஆர்னால்ட் $201 பில்லியன்
- ஜெஃப் பெசோஸ் $200 பில்லியன்
- பில் கேட்ஸ் $159 பில்லியன்
- லாரி எல்லிசன் $154 பில்லியன்
- லாரி பேஜ் $149 பில்லியன்
- ஸ்டீவ் பால்மர் $145 பில்லியன்
- வாரன் பஃபெட் $143 பில்லியன்
- சேர்ஜி பிரின் $141 பில்லியன்
- ஜென்சன் ஹுவாங் $ 113 பில்லியன்
- கவுதம் அதானி $104 பில்லியன் உடன் இப்போது 15 வது இடத்தில் உள்ளார்.
இறுதியாக, முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் பின்தங்கிய காரணத்திற்கு பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு காரணமாக சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) விலை ஏற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. திடீர் விலை ஏற்றம் காரணமாக பல லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ இழந்துள்ளதும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. யானைக்கும் சில நேரம் அடிசறுக்கும் என்பதனால், இதை கண்டுக்கொள்ளாமல், ரேங்கிங் பட்டியலில் மீண்டும் அம்பானி முன்னேறி வர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications








