ஆகஸ்ட் 28ல்.. அம்பானி வீசப்போகும் குண்டு.. உடனே ஒரு பெரிய Jio பிளானை ரீசார்ஜ் பண்ணி தப்பிச்சுக்கோங்க?
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஏஜிஎம் (AGM) நிகழ்வின் போது தான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆன முகேஷ் அம்பானி (Mukesh Ambani) மிகப்பெரிய அறிவிப்புகளை நிகழ்த்துவார். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று தயாராக இருக்கவும்.
ஏனென்றால், ஆர்ஐஎல் ஏஜிஎம் 2023 (RIL AGM 2023) என்று சுருக்கமான அழைக்கப்படும், இந்த ஆண்டிற்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஆண்டு பொது கூட்டமானது (Annual General Meeting) ஆகஸ்ட் 28 ஆம் தேதி தான் நடக்கவுள்ளது. இந்நிகழ்வின் போது முகேஷ் அம்பானி "பெரிய பெரிய" அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஜியோ 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் (Jio 5G Plans Price) பற்றிய அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய சந்தையில் ஜியோ 5ஜியின் எதிர்காலம், ஜியோ ஏர் ஃபைபர் சேவையின் ரோட் மேப் (JioAir Fiber Roadmap), புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் (Jio 5G Smartphone) போன்றவைகளுடன் சேர்த்து ஜியோ 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை நிர்ணயமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனே.. "முகேஷ் அம்பானி வாக்குறுதி அளித்தபடி, ஜியோ நிறுவனத்தின் 5ஜி ரீசார்ஜ் கட்டண திட்டங்களானது உலகில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களை விடவும், மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைத்தால், ஜியோ கஸ்டமர்களாகிய நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை..."
"ஒருவேளை ஜியோ 5ஜி திட்டங்களின் விலைகள் 4ஜி திட்டங்களை விட மிகவும் அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இப்போதே ஒரு பெரிய ஜியோ திட்டத்தை பார்த்து அதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாமா? அப்படி செய்வதன் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு ஜியோ 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை! என்றெல்லாம் நீங்கள் யோசித்தால்.. அதற்கான பதில் இதோ:
பெரும்பாலும் ஜியோ 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயமானது ஜியோ 4ஜி திட்டங்களை போலவே தான் இருக்கும். ஏனென்றால், ஜியோ 5ஜி திட்டங்களானது ஜியோ 4ஜி திட்டங்களை போல ஒரு பெரிய பாய்ச்சலாக இருக்காது.. அவைகள் மெல்ல மெல்ல தான் மக்களை சென்றடையும்.
இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். நாடு முழுவதும் 4ஜி அணுக கிடைத்தாலும் கூட 4ஜி போன்களை கொண்டுள்ளவர்களால் மட்டுமே 4ஜி சேவைகளை அணு முடியும்; அதே நிலை தான் 5ஜி சேவையிலும்!
ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் ஆனது நாட்டில் உள்ள அதன் அனைத்து டெலிகாம் வட்டங்களிலும் (Telecom Circles) அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அங்கே உள்ள அனைவரின் கைகளிலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இல்லை. இந்த இடத்தில் தான் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்யப்போகும் "மிகவும் மலிவான" ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றும்.
ஜியோ மட்டுமல்ல மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் கூட மிகவும் மலிவான விலைக்கு தத்தம் 5ஜி ஸ்மார்ட்போன்களை (Cheapest 5G Phones) அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது தான் 5ஜி போன்களின் பயன்பாடு அதிகரிக்கும், கூடவே ஹை-ஸ்பீட் இண்டர்நெட்டை வழங்கும் 5ஜி சேவையின் உண்மையான தேவையும் அதிகரிக்கும்.
அந்த நேரத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5ஜி திட்டங்களின் விலைகளை பற்றித்தான் நாம் உண்மையிலேயே கவலைப்பட வேண்டும். அந்த நேரத்தில் தான், எந்த நிறுவனம் உண்மையிலேயே சிறந்த மற்றும் மலிவான 5ஜி கட்டணத் திட்டங்களை வழங்குகிறது என்பது நமக்கு தெரிய வரும். நிச்சயமாக - அதற்கு இன்னும் நிறைய மாதங்கள் உள்ளன; அதுவரையிலாக எந்த அச்சமும் வேண்டாம்!


Click it and Unblock the Notifications








