முகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்து செய்யும் டிஜிட்டல் புரட்சி.!

|

இந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, அதாவது இதுவரை இண்டர்நெட் உபயோகிக்காத மக்களையும் இண்டர்நெட்டை உபயோகிக்க வைக்க உலகின் இரண்டு முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானியும், மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களும் இணைந்துள்ளனர்.

முகேஷ் அம்பானி-மார்க்

முகேஷ் அம்பானி-மார்க்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஆகியோர்களின் இந்த கூட்டணியால் இந்தியாவில் மேலும் 10 கோடி பேர் புதியதாக இண்டர்நெட்டை முதல்முறையாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிரது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

ஆம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து ஒரு டிஜிட்டல் புரட்சியே செய்யவிருக்கின்றது. 'டிஜிட்டல் உதான்' என்ற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த புரட்சியில் இண்டர்நெட் என்றாலே என்னவென்றே தெரியாமல் இருக்கும் மக்களுக்கு இண்டர்நெட்டின் அவசியத்தை புரிய வைப்பதுதான் இலக்கு

இந்தியா: ஐந்து கேமராக்களுடன் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?இந்தியா: ஐந்து கேமராக்களுடன் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை

இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை

இந்த திட்டத்தை இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் 10 மாநில மொழி பேசும் மக்களை சுமார் 200 பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த முயற்சியால் இந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் 30 கோடி அதிகரிக்கும் என கூறப்படுகிறது

அன்லிமிடெட் அழைப்பு

அன்லிமிடெட் அழைப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, டிஜிட்டல் உலகில் ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் அழைப்பு, இண்டர்நெட் டேட்டா என கொடுத்து கொண்டிருக்கின்றது. அதேபோல் சீன நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக குறைந்த விலையில் ஜியோ ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது எதுவும் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் புகைப்படங்கள்!சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது எதுவும் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் புகைப்படங்கள்!

புதிய வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

ஜியோ வருகைக்கு பின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இழுத்து மூடப்பட்டாலும் ஜியோவுக்கு போட்டியாக தற்போது ஏர்டெல் மற்றும் வோடோபோன் மட்டுமே தாக்குப்படித்து நிற்கின்றது. தற்போது ஜியோவின் இந்த புதிய முயற்சியால் மேலும் பல புதியவாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் தீவிரம்

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் தீவிரம்

ஏற்கனவே மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ எடுத்து வரும் இந்த புதிய முயற்சியால் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கைக்கும் அனுகூலமாக அமையும்.

 ஜியோவின் ஊழியர்கள்..

ஜியோவின் ஊழியர்கள்..

ஜியோவின் ஊழியர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய இண்டர்நெட் பயனாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு இண்டர்நெட் அவசியத்தையும் ஜியோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் முறையையும் பயிற்றுவிக்கவுள்ளனர். அதுமட்டுமின்றி ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது எப்படி, இண்டர்நெட்டில் மோசடி செய்பவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி? போன்ற பயிற்சியையும் அவர்கள் அளிக்கின்றனர்.

ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?

 பாமரர்களுக்கும் புரியும் வகையில் வகுப்புகள் இருக்கும்

பாமரர்களுக்கும் புரியும் வகையில் வகுப்புகள் இருக்கும்

மேலும் டிஜிட்டல் உதான் திட்டத்தின்படி பத்து ஆடியோ மற்றும் வீடியோ பயிற்சி சிடிக்கள் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், இதில் எளிய வகையில் பாமரர்களுக்கும் புரியும் வகையில் வகுப்புகள் இருக்கும் என்றும், இந்த சிடிக்களை பார்ப்பவர்களுக்கு இண்டர்நெட் குறித்த அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

 டிஜிட்டல் உதான் திட்டம்

டிஜிட்டல் உதான் திட்டம்

இந்த டிஜிட்டல் உதான் திட்டம் வெற்றிகரமாக இயங்கினால் அடுத்தகட்டமாக மேலும் 7000 பகுதிகளில் இதேபோல் புதிய இண்டர்நெட் பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு இண்டர்நெட் மற்றும் ஜியோபோன் குறித்த பயிற்சிகள் அளிக்கவும் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Mark Zuckerberg join hands to target millions of India's first time internet users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X