இரண்டாவது இடம்: அம்பானி அவர்களுக்கு இப்படியொரு நிலைமையா? இதுதான் காரணம்.!

|

தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், அதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சரிந்து, அவர் அசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இரண்டாவது
இடத்திற்கு தள்ளப்பட்டார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

வரலாறு காணாத வீழ்ச்சி

வரலாறு காணாத வீழ்ச்சி

அதாவது சீனாவில் பரவி மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்கிய கொரோனா வரைஸ் தாக்குதல் தற்போது உலகம் முழுவதும்பரவி பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் இந்தியப் பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தன.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளும் கடும் சரிவைக் கண்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

சுமார் 5.8 பில்லயன் டாலர்

சுமார் 5.8 பில்லயன் டாலர்

மேலும் நேற்று முன்தினம் மட்டும் முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது, இதன் எதிரொலியாக அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்லயன் டாலர் அளவிற்கு சரிந்தது என்று கூறப்படுகிறது.

ஜாக்மா அவர்கள்

ஜாக்மா அவர்கள்

பின்பு இதன் காரணமாகத்தான் ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு சென்றார். குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக்மா அவர்கள் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

2.6பில்லியன் டாலர் அதிகம் ஆகும்

2.6பில்லியன் டாலர் அதிகம் ஆகும்

ஜாக் மா அவர்களின் நிகர சொத்து மதிப்பு 44.5பில்லியன் டாலர் ஆகும், இது அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6பில்லியன் டாலர் அதிகம் ஆகும். அலிபாபா குரூப் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக்மாவும் தற்போதைய உலக
பொருளாதார மந்த நிலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி சந்தித்த சரிவு மிகப்பெரியது

குறிப்பாக கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் அம்பானி சந்தித்த சரிவு மிகப்பெரியது என்பதால் ஜாக் மா அவர்கள்மீண்டும் முதலிடத்திற்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

ஆனால் பொருளாதார வல்லுநர்கள் கூறியதன் அடிப்படையில்,இந்த பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமாகவே அம்பானியை பாதித்திருப்பதாகவும் விரைவில் அவர் மீண்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவர் தொடங்கிய ஜியோ நிறுவனம் 3ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்திருப்பதாகவும், அதன் பங்குகள் நடப்பு ஆண்டு முதல் எதிரொலிக்கும் என்று கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani loses No 1 Asia’s Richest Man Position : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X